சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஜய் சேதுபதிக்கு விஜய் டிவி போட்ட கண்டிஷன்.. இது என்ன அநியாயமா இருக்கு

Vijay Tv: விஜய் டிவி புது புது விஷயங்களை செய்து பார்வையாளர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எப்போதுமே தீவிரம் காட்டி வரும். அந்த வகையில் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியதால் உடனே விஜய் சேதுபதியை பல கோடிகள் கொடுத்து கமிட் செய்தனர்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என ப்ரோமோவையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளனர். அது மட்டும் இன்றி இந்த முறை வெரைட்டியான போட்டியாளர்கள் களமிறங்க இருக்கின்றனர்.

அதன்படி நடிகர் ரஞ்சித், செல்லம்மா சீரியல் அர்ணவ், அன்ஷிதா, சுனிதா, பவித்ரா ஜனனி, சஞ்சனா, இசை பிரபலம் அனீஸ், டான்ஸ் மாஸ்டர் கோகுல் என பலர் பங்கேற்கின்றனர். மேலும் தொகுப்பாளினி ஜாக்குலின், விஜே விஷால், பாரதி கண்ணம்மா அருண், சந்தோஷ் பிரதாப், சௌந்தர்யா, ஐஸ்வர்யா, தர்ஷா குப்தா, ஜோயா உள்ளிட்டோரும் இந்த சீசனில் இருக்கின்றனர்.

விஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஜய் டிவி

இதில் கடைசி நேரத்தில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி பிக்பாஸ் ஒரு பக்கம் கலைகட்டி வரும் நிலையில் விஜய் டிவி விஜய் சேதுபதிக்கு ஒரு கண்டிஷனை போட்டிருக்கின்றனர்.

அதாவது இந்த நிகழ்ச்சி முடிவடையும் வரை அவர் வேறு எந்த படம் பற்றிய பிரமோசனிலும் ஈடுபடக்கூடாது என சொல்லி இருக்கிறார்களாம். பொதுவாக விஜய் சேதுபதி சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இயக்குனர் ஆகியோரின் படங்களை தன் சோசியல் மீடியா பக்கத்தில் ப்ரோமோஷன் செய்வார். இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தற்போது விஜய் டிவி இப்படி ஒரு முட்டுக்கட்டை போட்டிருப்பது தேவையில்லாத ஆணியாக இருக்கிறது. இதைத்தான் ரசிகர்களும் சலசலத்து வருகின்றனர். இதுவே ஆண்டவராக இருந்தால் விஜய் டிவி இப்படியெல்லாம் கண்டிஷன் போட முடியுமா என்ற கேள்வியும் தீயாக பரவி வருகிறது.

விஜய் டிவி போட்ட முக்கிய கண்டிஷன்

Trending News