சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வேட்டையன் படத்தில் நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம்.. விஜய்யை விட 100 கோடி கம்மியா வாங்கும் ரஜினி

Rajini : வேட்டையன் படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் இப்போது இணையத்தில் உலாவி வருகிறது. படத்தின் ஹைப்பை ஏற்றுவதற்காக பிரபலங்கள் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் ரஜினி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த நிலையில் இன்று வீடு திரும்பியிருக்கிறார். இந்த மகிழ்ச்சி ஒருபுறம் ரசிகர்களுக்கு உள்ள நிலையில் வேட்டையன் ரிலீஸ் நெருங்கி வருவதால் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த சூழலில் வேட்டையன் படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் நடித்துள்ளனர். மஞ்சு வாரியாருக்கு 3 கோடியும், ரித்திகா சிங்-க்கு 30 லட்சம் சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்

ராணா டகுபதிக்கு 5 கோடி மற்றும் பகத் பாசிலுக்கு 4 கோடியும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடித்த நிலையில் 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளனர். இதில் ரஜினியின் சம்பளம் தான் பலரும் வியக்கும்படி இருக்கிறது.

அதாவது வேட்டையன் படத்திற்காக ரஜினியின் சம்பளம் 125 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது விஜய் நடித்துவரும் தளபதி 69 படத்திற்கு அவருடைய சம்பளம் 225 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி பார்க்கும்போது ரஜினியை விட விஜய் 100 கோடி அதிகமாக சம்பளம் பெற்றுள்ளார்.

மேலும் வேட்டையின் படம் நல்ல வசூலை பெற்றால் அடுத்தடுத்து ரஜினியின் சம்பளம் அதிகம் உயர வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒரு படம் தோல்வியுற்றால் தனது அடுத்த படத்தின் சம்பளத்தை ரஜினி குறைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நெருங்கும் வேட்டையன் ரிலீஸ்

Trending News