திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தளபதி 69 மரண ஹிட் அடிக்கணும்.. கங்கணம் கட்டிய விஜய், என்ன செய்யப் போறாரு H.வினோத்.?

Thalapathy 69: ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அதற்கு முன்பே இப்படத்தில் இணைய போகும் நட்சத்திரங்களை தயாரிப்பு தரப்பு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தனர்.

அதன்படி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் என பலர் இணைந்துள்ளனர். அதனாலேயே படம் எந்த மாதிரியான கதைகளம் என தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள விஜய்க்கு இப்படம் அது சார்ந்த கதையாக இருக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால் வினோத் இது முழு அரசியல் படம் கிடையாது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயம் உண்டு என தெரிவித்திருந்தார்.

மரண ஹிட்டுக்கு தயாராகும் விஜய்

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய கடைசி படம் என்பதால் விஜய் இப்படத்தின் மூலம் மரண ஹிட் கொடுக்க வேண்டும் என கங்கணம் கட்டி இறங்கி இருக்கிறாராம். அதற்கு ஏற்றார் போல் வினோத்தின் திரைக்கதையும் இருக்கும் என்கிறது திரையுலக வட்டாரம்.

இயக்குனரை பொறுத்தவரையில் படம் தான் பேச வேண்டும். இதற்கு தனி பிரமோஷன் எல்லாம் தேவை இல்லை என்ற மனப்பான்மை கொண்டவர். அதனாலயே அவருடைய படங்கள் ரசிகர்களை விரைவில் கவர்ந்து விடுகிறது.

அந்த வகையில் இப்படம் வெளியான பிறகு விஜய் முழு மூச்சாக அரசியல் களத்தில் இறங்க இருக்கிறார். அதற்கு ஒரு முன்னோட்டமாக இப்படம் இருக்கும் என்கின்றனர். ஆக மொத்தம் வினோத் விஜய்க்கு தரமான ஒரு ஃபேர்வெல் கொடுக்க தயாராகி விட்டார்.

விஜயின் கடைசி படம் எப்படி இருக்கும்.?

Trending News