வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கோலாகலமாக தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 8.. 18 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ!

Bigg Boss Season 8: விஜய் டிவியில் நாளை அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த சூழலில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் சற்றும் எதிர்பார்க்காத பல போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் ரஞ்சித் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறார். அதேபோல் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரும் கலந்து கொள்கிறார்.

இவர் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரிவ்யூ கொடுத்து வந்தார். இப்போது அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஆச்சரியம்தான். விஜய் டிவியில் பிரபலமான சுனிதா, தர்ஷா குப்தா ஆகியோரும் இந்த சீசனில் இடம் பெறுகிறார்கள். சீனியர் நடிகையான ஐஸ்வர்யா, சின்னத்திரை நடிகை அன்ஷிதா கலந்து கொள்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் 18 போட்டியாளர்கள்

சார்பட்ட பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர் சந்தோஷ் பிரதாப், இளம் நடிகை சச்சனா, பாடகர் அனீஸ், நடன இயக்குனர் கோகுல்நாத் ஆகியோரும் இந்த சீசனில் கலந்து கொள்கின்றனர். எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடல் அழகிகள் கலந்து கொள்ளும் நிலையில் இந்த முறை சஞ்சனா பங்கு பெறுகிறார்.

சின்னத்திரை நடிகர் அர்னவ், நடிகை பவித்ரா ஆகியோரும் பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்கின்றனர். மேலும் பாக்கியலட்சுமி தொடரின் மூலம் பிரபலமான விஜே விஷால் மற்றும் விஜய் டிவியின் பிரபலம் தீபக் தினகரன் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்ற ஜோயா பிக் பாஸ் வீட்டுக்குள் போக உள்ளார். மேலும் பாரதிகண்ணம்மா தொடரில் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாந்த் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் ஆகியோர் இந்த சீசனில் களமிறங்குகின்றனர்.

ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 8

- Advertisement -

Trending News