நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் எல்லாத்துக்கும் முன்னோடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரிலீஸ் ஆகும் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் இவர்களது கையில் தான். 2025 வெளியாகவிருக்கும் பத்து படங்களுக்கு மேல் இப்பமே துண்டை போட்டு வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் ஹீரோக்களை ஏ பி சி என வரிசைப்படுத்தி படங்களின் வியாபாரத்தையும், படங்களின் ஓடிபி ரிலீஸ் நாட்களையும் பிரித்து வைத்துள்ளனர். பெரிய ஹீரோக்கள் படங்களை அதிக விலை கொடுத்து வாங்க மறுக்கிறார்கள். சமீபத்தில் இந்தியன் 2 படத்தால் இவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்களான் படத்தையும் இவர்கள்தான் வாங்கினார்கள்.அந்தப் படத்திற்கு இருந்து வந்த பெரிய எதிர்பார்ப்பு காரணமாக இவர்கள் 60 கோடிக்கு வாங்குவதாக அக்ரிமெண்ட் போட்டுள்ளனர்.
கார்ப்பரேட் மூளையால் விக்ரமுக்கு கொடுக்கும் நெருக்கடி
தங்களான் படம் தியேட்டரில் சரி வர போகாத காரணத்தால். இப்பொழுது இந்த விலை கொடுக்க மறுத்து வருகிறார்கள். ஏற்கனவே அக்ரிமெண்ட் போடப்பட்டது என தயாரிப்பாளர் போர்க்கொடி தூக்கவே, அதற்கும் முட்டுக்கட்டையாக கார்ப்பரேட் மூளையை பயன்படுத்தி பிரச்சனையை சமாளித்து வருகின்றார்கள்.
தங்களான் படத்திற்கு உண்டான சில கண்டண்டுகளை சரியான தேதியில் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும், அதனால் நாங்கள் படம் சம்பந்தமான விஷயங்களை சரிவர கவனிக்க நேரமில்லை என்றும் . இந்த குளறுபடியால் தான் அதிக விலைக்கு ஒத்துக்கொண்டோம் என பாயிண்ட்டை வேறு மாதிரி திசை திருப்பி வருகின்றது.
- விக்ரமால் நடிக்க முடியாமல் திணறிய விக்ரம் பிரபு.
- சோழர்களை பெருமைப்படுத்திய விக்ரம்
- அமேசான், ஹாட் ஸ்டாரை தடம் தெரியாமல் அழிக்கும் நெட்பிளிக்ஸ்