Mammootty : மலையாள சினிமாவில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்கள் எதிர்பாராமல் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்தது. அதுவும் தமிழில் டப்பிங் செய்து வெளியாகி இங்கும் வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் தமிழில் பல படங்கள் ரீ ரிலீஸ் ஆவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் மலையாளத்திலும் மோகன்லால், மம்மூட்டியின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த வகையில் மோகன்லாலின் தேவதூதன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த படம் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் ரீ ரிலீஸ் செய்த பிறகு நல்ல வசூலை பெற்றது. மேலும் படத்தில் எடிட்டிங் செய்து சில காட்சிகளை நீக்கி இருந்தனர். இப்படத்தில் மோகன்லாலுடன் ஜெயப்பிரதா நடித்திருந்தார்.
மம்மூட்டிக்கு மட்டும் கிடைக்காத அதிர்ஷ்டம்
அதேபோல் மோகன்லாலின் மற்றொரு படமான மணிசித்திரத்தாழ படமும் வெளியானது. இந்தப் படமும் ஓரளவு நல்ல பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற நிலையில் மம்மூட்டியின் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வந்தனர்.
அந்த வகையில் அக்டோபர் 4ஆம் தேதி பலோரிமாணிக்கம் என்ற மம்மூட்டியின் படம் வெளியானது. ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. தியேட்டர் எல்லாம் வெறிச்சோடி தான் காணப்பட்டது. மோகன்லாலுக்கு அடித்த அதிர்ஷ்டம் மம்மூட்டிக்கு அடிக்காமல் போய்விட்டது.
இதற்கு காரணம் மோகன்லால் ரீ ரிலீஸ் படங்கள் ஜூலை மாதமே வெளியானது. ஆனால் மம்மூட்டியின் படம் இப்போதுதான் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள சினிமாவில் அதிருப்தி இருந்து வரும் நிலையில் மம்மூட்டியின் படம் போகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ரீ ரிலீஸில் தோல்வியை தழுவிய மம்மூட்டி
- கிழ சிங்கங்கள் மோகன்லால், மம்மூட்டியின் வேலை
- பிரபலத்தின் மகள், கண்கள் கூசும் அளவிற்கு நடந்து கொண்ட மோகன் லால்
- ஒவ்வொன்னும் வேற ரகம், மம்மூட்டியின் 8 வெரைட்டி படங்கள்