சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

1000 கோடி அடிச்சுரும் போலையே.. ப்ரீ புக்கிங்லயே பல கோடியை அள்ளிய வேட்டையன்

ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது வேட்டையன் படம். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அக்டோபர் 10 வெகுநாட்களில் இல்லை.

இந்த நிலையில் படத்தை பாய்ந்து பாய்ந்து அனைவரும் ப்ரோமோஷன் செய்து வந்தாலும், பெரிய அளவில் மக்கள் படத்தை பற்றிய ஹைப் இல்லை. இத்தனைக்கும் இந்த படத்தில் பிரம்மாண்டமான ஸ்டார் காஸ்டிங்கும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், அபிராமி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் சிங்கிள்ஸ் ரசிகர்களை ஆட்டம்போட வைத்தது. ரூ. 160 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வேட்டையன் படம்.

ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் வேட்டையன்

வேட்டையன் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் டிக்கெட்டுகளை கொத்து கொத்தாக புக் செய்துள்ளனர். தற்போது புக்கிங் அனைத்துமே அக்டோபர் 10ம் தேதி மதியம் 12 மணிக்கு மேலான காட்சிகளுக்காக தொடங்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளுமே புக் ஆகிவிட்டது.

இந்த ப்ரீ புக்கிங் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மட்டும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கி இரவு 10.55 வரையிலான அனைத்து டிக்கெட்டுகள் மொத்தமும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ப்ரீ புக்கிங்கில் வேட்டையன் பல கோடி வசூல் செய்திருக்கும். மேலும், ரஜினி ரசிகர்கள், 4 மணி ஸ்பெஷல் ஷோ க்கு அனுமதி தரவேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

Trending News