அடப்பாவிகளா.. இது என்னடா புதுசா இருக்கு.. Rental – க்கு மனைவி.. எடுடா வண்டிய என்று கிளம்பும் 90ஸ் கிட்ஸ்

பிரியமானவளே படத்தில் நடக்கும் ஒப்பந்த திருமணம் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. எத்தனையோ வகையான திருமணங்கள் இருந்தாலும், இந்த வகையான திருமணம் ஒரு விவாத பொருளாகவே உள்ளது.

பிரியமானவளே படத்தில், குடும்ப சூழ்நிலை காரணமாக ஒப்பந்த திருமணத்தில் ஈடுபடுவார் சிம்ரன். ஆனால் நாள் ஆக ஆக காதல் வயப்பட்டு மனைவி என்ற அந்தஸ்த்திலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பார். அந்த படத்தில், எப்படி பணத்துக்காக சிம்ரன், ஒப்பந்த திருமணம் செய்வாரோ.. அதே போல, அரேபிய சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமான புன்காக்(Puncak) கிராமத்தில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த இளம் பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆண் சுற்றுலாப் பயணிகளை பணத்திற்காக திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த நடைமுறை, சட்டவிரோதமானது என்றாலும், உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பங்களிக்கும் ஒரு லாபகரமான தொழிலாக இது மாறியுள்ளது. இதற்க்கென்று ஏஜென்சிகளே உள்ளது. இந்த ஏஜென்சிகள் உள்ளூர் பெண்களை சுற்றுலாப் பயணிகளுடன் இணைக்கின்றன. சுருக்கமாக சொன்னால், முறைசாரா திருமண விழாக்களை நடத்தி வைக்கின்றன.

இது ஒப்பந்த திருமணமா அல்லது வேறு ஏதும் தொழிலா?

ஒப்பந்த திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், அவர்களுடன் தங்கியிருக்கும்போது வீட்டு மற்றும் உடல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வார்கள். இதை தொடர்ந்து சுற்றுலாப் பயணி புறப்பட்டவுடன், அந்த ஒப்பந்த திருமணம் தானாகவே முடிந்து விடுகிறது.

வறுமையால் 13 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்

தற்போது 28 வயதான, இளம்பெண் இது தொடர்பாக வெளிப்படையாக பேசியுள்ளார். தனது 13 வயதில் இந்த ஒப்பந்த திருமண முறைக்குள் நுழைந்துள்ளார். அன்று முதல் தற்போது வரை பதினைந்து முறைகளுக்கும் மேல் திருமணம் செய்து கொண்டுள்ளார். 50 வயதான சவூதி ஆணுடன் அவரது முதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கு ஈடாக அந்த பெண்ணுக்கு $850 வழங்கப்பட்டு உள்ளது. வறுமையில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற, இந்த ஒப்பந்த திருமணங்களை செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் கேட்கும்போது, உலகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment