சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஜய்யை நம்பி சினிமா இல்லை.. அவரு போனா வேற நடிகர்களே இல்லையா? பொறிந்து தள்ளிய பிரபலம்

விஜய்யை நம்பி சினிமா இல்லை என்று பிரபல முன்னாள் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் தி கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸானது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்ததாகத் தகவல் வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.126 கோடி என்று கூறப்பட்டது. ஒரு உச்ச நடிகரி படம் முதல் நாள் ரிலீஸின்போது ரூ.100 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனையாக பார்க்கப்பட்டாலும், இப்படத்தின் வசூல் ரூ.1000 கோடி குவியும் என்று பில்டப் செய்து இன்னும் ரூ.500 கோடியை எட்டாதது ஏமாற்றம் அளிப்பதாக பலரும் விமர்சித்தனர்.

விஜய் கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் விஜய் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்69 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டேட், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜயின் கடைசிப்படம் மற்றும் அரசியல் சார்ந்த படமாக இருக்கக் கூடும் என்பதால் இப்படத்தின் திரைக்கதையை வினோத்துடன் இணைந்து கமல் எழுதுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் எதிர்பார்ப்பு இப்போது எகிறிவிட்டது.

8 முறை தொடர்ந்து ரூ.200 வசூல்

இப்படி, விஜயின் ஒவ்வொரு படமும் பூஜை போடப்பட்ட நாள் முதல் அப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் நாள் வரை மாபெரும் கொண்டாட்டமாக ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில், அவர் படங்கள் எல்லாம் வசூலில் வேறு நடிகர்கள் செய்யாத அளவுக்கு வசூலில் தொடர்ந்து சாதனை படைத்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதில், விஜயின் மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், லியோ, வாரிசு, தி கோட் ஆகிய படங்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து சாதனை படைத்தன. பாகுபலி படத்திற்குப் பின் பான் இந்தியா நடிகராக உள்ள பிரபாஸ் சில படங்களில் மட்டுமே ரூ.200 கோடி வசூலை கொடுத்திருக்கிறார். பாலிவுட், கோலிவுட்,டோலிவுட், மாலிவுட்டிலும் வேறு எந்த நடிகரும் தொடர்ந்து ரூ.200 கோடி வசூல் குவித்ததில்லை.

அதேபோல் விஜயின் 2 படங்கள் முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவித்தன. இப்படி தயாரிப்பாளர் பணம் போட்டால் அது லாபம் என்ற சூழலை விஜயின் மார்க்கெட் நிர்ணயிப்பதாகவும் இதன் மூலம் தியேட்டர்களுக்கு லாபம் இருப்பதாக பலரும் கூறினர். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகையால் அவர் சினிமாவை விட்டு விலகினால் சினிமாவுக்கு பாதிப்பா என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் விஜய்யை நம்பி சினிமா இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளதாவது:

விஜய் அரசியலுக்கு போனதால் தியேட்டர்களுக்கு எந்த பாத்ப்பும் இல்லை. விஜய் போனாலும் நிறைய நடிகர்கள் இருப்பார்கள்.எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு ரஜினி, கமல் வந்தார்கள். ரஜினி, கமலுக்குப் பிறகு விஜய், அஜித் வந்தார்கள். இவர்களுக்குப் பிறகு அடுத்த ஜெனரேசன் நடிகர்கள் வருவார்கள். சினிமாவில் யார் வந்தாலும் யார் போனாலும் யாருக்கும் பாதிப்பு இருக்காது. மக்கள் பான் இந்தியா படங்களை விரும்புகிறார்கள்.

ஒருத்தரின் படங்களை நம்பி சினிமா இல்லை. சினிமா கூட்டு முயற்றி. எல்லா மொழிகளின் எல்லா நடிகர்களும் இருக்கிறார்கள். படம் நன்றாக இருந்தால் எந்த நடிகரின் படமாக இருந்தாலும் வர மக்கள் ரெடிதான். வாழை, லப்பர் பந்து சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் நன்றாகப் போகிறது. அதனால் ஆர்டிஸ்ட் முக்கியமல்ல, கதைதான் முக்கியம் மக்களுக்கு என்று தெரிவித்துள்ளார்.

திருப்பூர் சுப்பிரமணியம் இன்று விஜய் அரசியலுக்குப் போனாலும் சினிமாவுக்கும் தியேட்டர்களுக்கும் பாதிப்பில்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் மாதிரி எந்த பான் நடிகரும் தொடர்ந்து ரூ.200 கோடி வசூலை கொடுத்து ரெக்கார்ட் பண்ண முடியாது என அவரது ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.


Trending News