வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அண்ணன் வரார்.. வழி விடு.. OTT-யில் நம்பர் 1-ல் இருக்கும் விஜய் action படம்.. எது தெரியுமா?

தியேட்டரில் தெறிக்கவிட்டதோடு நிற்காமல் தற்போது தளபதியின் படம், OTT-யிலும் மாஸ் காட்டி வருகிறது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி ரூ.450 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி, ஓடிடியிலும் தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

ஆம் சமீபத்தில் வெளியான GOAT படத்தை பற்றி தான் இந்த கட்டுரையில் குறிப்பிட பட்டிருக்கு. “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியானது, படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், ஜெயராம், யோகி பாபு, மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி மற்றும் பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

OTT-யிலும் மாஸ் காட்டும் விஜய் VP கூட்டணி

அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் காந்தி என்ற லீட் ரோலில் நடிகர் விஜய் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் அழகிய தமிழ்மகன் படம் போலவே, ஹீரோவும் நானே, எனக்கு வில்லனும் நானே என்று மிரட்டி எடுத்திருப்பார். திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட “கோட்” திரைப்படம் சில நாட்களுக்கு முன் Netflix ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான ஒரு சில நாட்களிலேயே டாப் ட்ரெண்டிங் படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த படம் IMDB ரேட்டிங்கில் 10க்கு 6.3 புள்ளிகளை பெற்றுள்ளது. படம் வெளியான முதல் நாள் உலகெங்கிலும் ரூ. 126 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் படத்தின் மொத்த வசூல் ரூ. 295 கோடியும் அதே சமயம் உலகளவில் ரூ. 451 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது OTT-யிலும் நம்பர் ஒன்னாக இந்த படம் உள்ளது.

இது விஜய்க்கு இருக்கும் மவுசை காட்டுகிறது.. இதை தொடர்ந்து ரசிகர்கள்.. ‘அண்ணன் வரார்.. வழி விடு..’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News