2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும் வேட்டையன், கங்குவா போன்ற படங்கள் இந்த வருட ரிலீஸுகாக காத்திருக்கிறது. அடுத்த வருடம் பெரிதும் ஏழு படங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது அடுத்த ஆண்டு தொடக்கமே அஜித்தின் வருடமாக இருக்கப் போகிறது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதித் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. துணிவு படத்திற்குப் பிறகு அஜித்தின் படங்கள் வெளியாகாததால் அஜித்தின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.
ஆனால் அடுத்த வருடம் குட் பேட் அக்லி மட்டுமல்லாமல் விடாமுயற்சி படமும் வர இருக்கிறது. இதனால் தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். அடுத்ததாக லோகேஷ் மற்றும் ரஜினி காம்போவில் உருவாகி வருகிறது கூலி படம். இப்போது ரஜினியின் உடல்நிலை பிரச்சனை காரணமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.
2025 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 7 படங்கள்
மேலும் விரைவில் ரஜினி கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என லோகேஷ் கூறியிருந்தார். கூலி படமும் 2025 இல் வெளியாக இருக்கிறது. மேலும் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படமும் அடுத்த ஆண்டு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விக்ரமுக்கு இந்த ஆண்டு தங்கலான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்த ஆண்டு வீரதீர சூரன் படம் வர இருக்கிறது. மேலும் சூர்யாவுக்கு இந்த வருடம் கங்குவா ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்த வருடம் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 44 வது படம் வெளியாக உள்ளது.
மேலும் 2025இல் கழுகு போல் ரசிகர்கள் காத்திருக்கும் படம் தளபதி 69 தான். தனது பத்து வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கிய விஜய் 40 வருட சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். வினோத் இயக்கத்தில் உருவாகும் தளபதி 69 விஜய்யின் கடைசி படம். ஆகையால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பில் தளபதி 69
- விஜய்யை overtake செய்து நடிகையை மடக்கிய சிவகார்த்திகேயன்
- தளபதி 2 கதையை கூறிய மணிரத்னம்
- தளபதி விஜய் பற்றி இதுவரை வெளிவராத தகவலை சொன்ன பிரபலம்