Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஒருவர் இருக்கும் போது தெரியும் அருமை விட இல்லாத போது புரியும் ஏக்கம் தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்வார்கள். அது தற்போது ஈஸ்வரிக்கு நன்றாகவே புரிந்து வருகிறது. அதாவது ஈஸ்வரி, கணவர் இருக்கும் பொழுது கெத்தாக இருந்து மற்றவர்களின் மன நிலைமையை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் நோகடித்து பேசி விடுவார்.
ஆனால் தற்போது தாத்தா மரணத்திற்கு பிறகு ஈஸ்வரி எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிக்கற்களும் அவமானத்தை சந்திக்கும் அளவிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஈஸ்வரியை பொட்டு வைத்து பழைய மாதிரி புடவையில் பார்க்க பாக்யா முயற்சி எடுத்து வருகிறார். அதன்படி ஈஸ்வரியும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் பொழுது சுற்றி இருப்பவர்கள் ஈஸ்வரின் நிலைமையை பார்த்து நோகடிக்கும் படி பேசி விடுகிறார்கள்.
ஈஸ்வரியை நோகடித்து பேசிய அமிர்தாவின் அம்மா
அந்த வகையில் தற்போது இனியா கலந்து கொண்ட டான்ஸ் நிகழ்ச்சியே பார்ப்பதற்கு குடும்பத்துடன் அனைவரும் கிளம்பி விட்டார்கள். ஆனால் ஈஸ்வரி மட்டும் நான் வரவில்லை, நான் எங்கே இருந்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் போயிட்டு வாங்க என்று சொல்கிறார். ஆனாலும் பாக்கியா, நீங்க வந்தால் தான் நான் போவேன் என்று வலுக்கட்டாயமாக ஈஸ்வரியை கிளம்ப வைக்கிறார்.
அப்படி கிளம்பும் பொழுது நல்ல புடவையை கொடுத்து நெற்றியில் பொட்டு வைத்து கூட்டிட்டு போக தயாராகி விட்டார். அந்த நேரத்தில் அமிர்தாவின் அம்மா வீட்டிற்கு வருகிறார். அவர் வந்ததும் ஈஸ்வரியை பார்த்து கணவர் இறந்து ஒரு வருஷம் கூட ஆகல. அதுக்குள்ள இப்படி இருக்கிறீங்க இது நல்லதுக்கு இல்லை என்று ஈஸ்வரி மனசு கஷ்டப்படும்படி பேசி விடுகிறார்.
இதனால் மறுபடியும் ஈஸ்வரி வெளியே வராமல் ரூமுக்குள் போய் கதவை சாத்தி விடுகிறார். அப்பொழுது பாக்யா, அமிர்தாவின் அம்மாவை திட்டி வெளிய அனுப்பி விடுகிறார். அதற்கு அமிர்தாவின் அம்மா, அவங்க மட்டும் மற்றவர்களின் மனநிலை பார்த்து புரிந்து பேசினார்களா இல்லல்ல. அவங்க என்ன விதைத்தாங்களோ அதுதான் திரும்ப கிடைக்கும் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
பிறகு ஈஸ்வரி நான் எங்கேயும் வரவில்லை என்னை தனியாக விட்டுவிடு என்று சொல்லி பாக்கியவை அனுப்பி வைக்கிறார். அத்துடன் அனைவரும் இனியாவின் காலேஜுக்கு போகிறார்கள். அங்கே இனியாவின் டான்ஸை பார்த்ததும் கோபி அதிக அளவில் ஆர்ப்பாட்டம் பண்ணி பெருமையாக பேசுகிறார். கடைசியில் இனியா அந்த போட்டியில் வெற்றி பெறுகிறார்.
இதனை பார்த்து கோபி, இனியாவை ஓவராக கொண்டாடுகிறார். பிறகு இனியாவும் பாக்கியவை கண்டு கொள்ளாமல் கோபி பக்கத்தில் நின்று சந்தோஷமாக அந்த தருணத்தை கொண்டாடி வருகிறார். இதே மாதிரி செழியனும் கோபி பக்கம் சாய்ந்து விட்டார். மீதம் இருக்கிறது எழில்தான். அவரும் எந்த சூழ்நிலையில் எப்பொழுது கோபி பக்கம் போகப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.