சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

TVK கட்சியில் இணைந்த Mr.கிளீன்.. விஜய்யின் முதல் மாநாடு எப்படி இருக்க போகுது.?

TVK-Vijay: கட்சி ஆரம்பித்த கையோடு 2026 தேர்தல் தான் தன்னுடைய டார்கெட் என அறிவித்துவிட்டார் விஜய். அதன் பிறகு அவர் சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் கட்சி பணிகளையும் தங்கு தடையில்லாமல் செய்து வருகிறார்.

அதன்படி 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கியதில் தொடங்கி கட்சியின் கொடி, மாநாடு என ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து வருகிறார். மேலும் அவருடைய முதல் காட்சி மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

விக்ரவாண்டியில் நடக்கப்போகும் இந்த மாநாட்டிற்கான பூமி பூஜை கூட போடப்பட்டு விட்டது. அதை அடுத்து வரப்போகும் மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மாநாட்டில் பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்கப் போகிறார்கள் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதில் ராகுல் காந்தி பெயர் கூட அடிபட்டது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் செய்தியின் படி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கட்சியில் இணைந்துள்ளதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே இப்படி ஒரு பேச்சு இருந்தது. அது மட்டும் இல்லாமல் விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பும் பின்பும் கூட இவரிடம் சில அறிவுரைகளை கேட்டதாகவும் சொல்லப்பட்டது. வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் கூட இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியிருந்தார்.

விஜய் கட்சியில் இணைந்த சகாயம்

அந்த வகையில் தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்களும் இது தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அது மட்டும் இன்றி டிவிகே கட்சி மாநாட்டில் விஜய்யுடன் இவர் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும். நேர்மைக்கு பெயர் போன இவரை மிஸ்டர் கிளீன் என்று கூட சொல்வதுண்டு. சில வருடங்களுக்கு முன்பு இவர் அரசியலுக்கு வர வேண்டும் என இளைஞர்கள் கூட்டம் அவர் பின்னே சென்றனர்.

ஆனால் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் தர வேண்டும் என பல காரணங்களை சகாயம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் சூழலிலேயே விஜயுடன் இவர் இணைவார் என மக்கள் எதிர்பார்த்தனர்.

அது தற்போது உண்மையாகி இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் வகையில் மாநாடு இருக்குமாம். அதில் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தை ஆட்டம் காண வைக்கும் எனவும் தகவல்கள் கசிந்து உள்ளது.

விஜய்க்கு தோள் கொடுக்க வரும் சகாயம் ஐஏஎஸ்

Trending News