வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பெண்கள் அணிக்கு ஆப்பு வைத்த ரவீந்தர்.. ஜாக்குலின் எடுத்த தவறான முடிவு, பக்கவாக காய் நகர்த்தும் பவித்ரா

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆண்கள் எப்பொழுதுமே ஒற்றுமையாகவும் யாருக்காகவும் யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதற்கு ஏற்ப ஜாலியாக விளையாடி வருகிறார்கள். இதற்கு எதிர் மாறாக பெண்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டு பொறாமையுடன் ஒற்றுமையே இல்லாமல் சண்டை சச்சரவு என காட்டிக்கொண்டு வருகிறார்கள்.

பொதுவாக இரண்டு பெண்கள் இருந்தாலே அவர்களுடைய ஈகோ பெரிய அளவில் இருக்கும். தற்போது எட்டு பேர் இருக்கிறார்கள் என்றால் சொல்லவா செய்யணும், நான் பெரியவள் நீ பெரியவளா என்ற பட்டிமன்றம் வைக்கும் படியாக ஒருவரை ஒருவர் முகத்தை காட்டிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜாக்லின் ஏதாவது வித்தியாசமாக பண்ணி தனித்துவமாக மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முயற்சி எடுத்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை சரியாக புரிந்து கொள்ளும் ரவீந்தர் மற்றும் பவித்ரா

ஆனால் இதுவே இவருக்கு கொஞ்சம் கெட்ட பெயரை உருவாக்கிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் பெண்கள் அணியில் தற்போது வரை பவித்ரா மற்றும் தர்ஷிகா கொஞ்சம் நல்ல பேரை சம்பாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்குப் போன பவித்ரா முழுமையாக ஆண்கள் அணிக்கு சப்போர்ட்டாக விளையாடி வருகிறார்.

அந்த வகையில் ரவீந்திரிடம் போனதும் நான் உங்களுக்கு நியாயமாக இந்த அணியில் எல்லா வேலைகளையும் பார்ப்பேன். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு இங்கே சப்போர்ட் கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று டீல் பேசியிருக்கிறார். அந்த வகையில் ரவிந்தர் மற்றும் பவித்ரா உடைய விளையாட்டு கொஞ்சம் புத்திசாலித்தனமாக போய்க்கொண்டிருக்கிறது.

தற்போது வந்த ப்ரோமோ படி ஆண்கள் அணிதான் பிக் பாஸ் வீட்டுக்குள் ரூல் பண்ண வேண்டும் என்று அறிக்கை வந்திருக்கிறது. பெண்கள் ஸ்டோர் ரூமுக்கு வர வேண்டும் என்றால் ஆண்கள் அனுமதி இல்லாமல் வரக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்பொழுது ஆண்கள் மொத்த டீமும் கலந்து ஆலோசிக்கும்போது அங்கே இருக்கும் பவித்ரா ஒரு ஐடியா கொடுக்கிறார்.

அதாவது பெண்கள் அணிகள் ஸ்டோர் ரூமுக்கு வரவேண்டும் என்றால் நம்மிடம் பெர்மிஷன் வாங்கி தான் வர வேண்டும். அப்படி என்றால் உப்பு கொடுத்தால் தான் உள்ள வரவேண்டும் என பவித்ரா சொல்லுகிறார். அதன்படி ஆண்கள் அணி உப்பு வேண்டும் என்று பெண்களிடம் கேட்கிறார்கள். ஆனால் ஜாக்குலின், பெண்கள் அணியிடம் நாங்கள் உப்பு எல்லாம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி சும்மா இருந்துவிடலாம் என பிளான் போட்டு இருக்கிறார்.

அப்படி ஜாக்குலின் சொன்னதும் பெண்கள் அணியும் ஓகே என்று தலையை ஆட்டி விடுகிறார்கள். அந்த வகையில் ஜாஃபர் எங்களுக்கு உப்பு கொடுத்துவிட்டு நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் என்று டீல் பேசுகிறார். ஆனால் ஜாக்லின் எங்களுக்கு உப்பு கொடுக்க விருப்பமில்லை, எந்தவித பொருட்களும் இல்லாமல் சாப்பாடு இல்லாமல் எங்களால் சும்மா இருக்க முடியும் என்று தெனாவட்டாக பேசுகிறார்.

இதை பார்த்த ரவீந்தர் அதிரடியாக ஒரு முடிவை சொல்கிறார். அதாவது எல்லா சமையல் பொருட்களையும் எடுத்து நம்ம இடத்துக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லியபடி ஜாஃபர் அனைத்தையும் எடுத்துட்டு வந்து ஆண்கள் இருக்கும் இடத்தில் வைத்து விடுகிறார். கடைசியில் ஜாக்லின் பேச்சைக் கேட்டதால் பெண்கள் அணி சமைக்க முடியாமல் பொருட்கள் எதுவும் இல்லாமல் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எப்படியாவது ஜாக்லின் அனைவருடைய கவனத்தையும் பெறவேண்டும், அதற்காக உள்ள இருப்பவர்கள் நம் கண்ட்ரோலுக்கு வர வேண்டும் என்று ஒரு முடிவை சொல்லுகிறார். அதனால் எடுத்த தவறான முடிவால் தற்போது பெண்கள் அணியில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது வரை ரவீந்தர் மற்றும் பவித்ரா பக்கவாக காய் நகர்த்தி விளையாடி வருகிறார்கள்.

Trending News