வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கீரியும் பாம்புமாக சண்டை போடும் 2 போட்டியாளர்கள்.. ஜூனியர் சீனியர் பிரச்சினையால் மோதும் விஜய் டிவி பிரபலங்கள்

Bigg Boss 8 Tamil: இந்த முறை பிக் பாஸ் சீசன் பார்க்கவே கொஞ்சம் விறுவிறுப்பாக போகும் என்று சொல்வதற்கு ஏற்ப அனைத்து போட்டியாளர்களுமே தெரிந்த முகமாக இருப்பதால் யார் யாருடைய சுயரூபம் தெரியப்போகிறது. யார் ஜெயித்துக் காட்டப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது என்பதற்கு ஏற்ப மக்கள் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இப்பொழுது வரை தீபக், ரவீந்தர், பவித்ரா, தர்ஷிதா, ஜாக்லின், சுனிதா இவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்திலிருந்து ஜாக்லின் மற்றும் சுனிதாவுக்கு இடையே ஈகோ க்ளாஸ் ஆகி கொண்டு வருகிறது. ஏனென்றால் இவர்கள் இருவருமே விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்கள்.

அதிலும் ஜாக்குலினை விட சுனிதா தான் சீனியர். அந்த வகையில் ஜோடி நம்பர் 1 முதல் இப்பொழுது கோமாளி வரை தொடர்ந்து விஜய் டிவியில் பயணித்து பிரபலமாகி மக்களிடத்தில் இவருக்கான ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார். ஆனால் ஜாக்குலின் சில நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கினாலும் பாதியிலேயே காணாமல் போய்விட்டார்.

இதனால் நீயா நானா என்று சண்டை போடும் அளவிற்கு கீரியும் பாம்புமாக ஜாக்குலின் மற்றும் சுனிதாவின் கருத்துக்கள் முட்டி மோதிக் கொண்டு வருகிறது. அதனால் சுனிதா கிடைக்குற கேப்பில் எல்லாம் ஜாக்கிலியினை மட்டம் தட்டி காலி பண்ணி வருகிறார். ஜாக்லினும் தன்னை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற கடுப்பில் சுற்றிக்கொண்டு வருகிறார்.

இதனால் தான் முதல் நாளிலேயே பெண்கள் அணியில் சேர்ந்து தூங்காமல் தனியாக தூங்கினார். இதையெல்லாம் தாண்டி ஜாக்லின் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்ல வந்தால் அதை கண்டுக்காமல் உதாசீனப்படுத்தும் விதமாக நக்கல் அடித்து சுனிதா அந்த பேச்சை தடுத்து விடுகிறார். அதே மாதிரி சுனிதா என்ன சொல்ல வந்தாலும் ஜாக்லினும் அலட்சியப்படுத்தி வருகிறார்.

இவர்களுக்கிடையே பவித்ரா தான் பொதுவான கருத்துக்களை எடுத்து வைத்தார். ஆனால் தற்போது இவரும் ஆண்கள் அணிக்கு போய்விட்டதால் பெண்கள் அணியில் தற்போது சுனிதா மற்றும் ஜாக்லின் சொல்வதை கேட்கும் படியான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளிலேயே ஜாக்லினுக்கு மக்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News