ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

பேசாம தூங்கிருக்கலாம்.. நானே வந்து மாட்டிகிட்டேனே.. 100 கோடி ரூபாயை எண்ணி வைக்க சொன்ன நாகார்ஜுனா

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து காரணமாக இருந்தது முன்னாள் அமைச்சரும், பாரதிய ராஷ்ட்ரா சமீதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி. ராமா ராவ் தான் என்று தெலுங்கானா மாநில வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து வரும் கொண்டா சுரேகா பேசினது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவர் அளித்த பேட்டியில், “நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து சென்றதற்கு காரணமே முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான். அந்த அமைச்சரால் சமந்தா மட்டுமல்ல, பல நடிகைகளும் சினிமா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலகியுள்ளனர்.

அப்போது அமைச்சராக இருந்த அவர் நடிகைகளின் போன்களை டேப் செய்து அவர்களின் பலவீனங்களை கண்டுபிடித்து பிளாக்மெயில் செய்வார். நடிகைகளை போதைக்கு அடிமையாக்கி பிறகு இப்படி செய்தார். இது எல்லோருக்கும் தெரியும் சமந்தா, நாக சைதன்யா, அவரது குடும்பத்தினரும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிவார்கள்” என்று பேசி அதிர்ச்சியை கிளப்பினார்.

இதற்க்கு பெருமளவில், குடும்பத்தோடு கண்டனங்களை தெரிவித்தார்.எதற்கும் அசையமாட்டேன்.. நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று மெத்தனத்தில் இருந்தார் அந்த பெண் அமைச்சர். ஒரு formality-க்கு கூட மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் நாட்கள் போக போக, எதிர்ப்பு வலுக்க, வேறு வழி இன்றி மன்னிப்பு கோரினார்.. ஆனாலும் இதை லேசில் விடுவதாக இல்லை..

100 கோடியை எண்ணி வைக்க சொன்ன நாகார்ஜூனா

இதை தொடர்ந்து, தெலங்கானா வனத்துறை அமைச்சரான சுரேகாவுக்கு எதிராக புகார் அளித்த நாகார்ஜூனா,”அமைச்சரின் பேச்சு எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருப்பதாக” கூறியிருந்தார்.

தனது மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகாவுக்கு எதிராக ரூ. 100 கோடி கிரிமினல் அவதூறு வழக்கில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார்.

இதற்க்கு பயந்து தான், தனது வார்த்தைகளை திரும்ப பெற்றதோடு, மன்னிப்பும் கூறியிருக்கிறார். பேசாம தூங்கியிருக்கலாம் நானே வந்து மாட்டிகிட்டேனே என்பது போல தான் இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News