சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

TVK மாநாட்டிற்கு சீமானை அழைத்தாரா? நிர்வாகிகள் புகார், விஜய்க்கு அண்ணனாக கூறிய அட்வைஸ்

தவெக முதல் மாநாட்டிற்கு சீமானை விஜய் அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீமான் பரப்பரப்பாக பேட்டியளித்துள்ளார். விஜய்யின் தவெக முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கான வேலைகள் படு ஜோராக நடந்து வருகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பிரமாண்டமான நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

தவெகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி?

இந்த நிலையில் ஏற்கனவே விஜயின் தவெகவுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி பயணிக்குமா? இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காத நாம் தமிழர் தன் கொள்கையை சமரசம் செய்து கொண்டு விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்குமா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

ஏற்கனவே தமிழக திராவிட கட்சிகளுக்கு விஜயின் கட்சியின் வருகை பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுவரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு தேர்தலில் கூட ஜெயிக்கவில்லை. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது.

அதனால் வரும் தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைத்து ஜெயிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக உள்கட்சிக்கும் தகராறு, முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறுதல் உள்ளிட்டவைகள் செய்திகளாக வருகின்றன. இதனால் இக்கட்சியுடன் விஜய் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்தன.

இந்த நிலையில் திரள்நிதியில் கட்சி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகி ஒருவர் திரள்நிதி மூலம் மாதம் ரூ.24 லட்சம் வருமானம் வந்ததாகவும் இதெல்லாம் ஆன்லைன் டிரான்சாக்சன் என்று தெரிவித்துள்ளார். சீமான் மீதும் அக்கட்சியின் மீதும் பல்வேறு நிர்வாகிகள் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வரும் தேர்தலில் விஜயுடன் கூட்டணியா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இல்லை என்றும் சமீபத்தில் சீமான் கூறியிருந்தார்.கூட்டணி இல்லையா என்பது இனி வரும் காலங்களில் தெளிவாகும். இந்த நிலையில் விஜயின் தவெக முதல் மாநாட்டிற்கு உங்களை அழைத்ததாரா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குச் சீமான் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் தெரிவித்துள்ளதாவது:

”இதுபோன்ற பேச்சுகள் எழுந்த போது ஒரு அண்ணனாக நான் அவரிடம் கூறியது: யாரையும் அழைக்க கூடாது, மாநாட்டில் தேவையில்லாதவை வரும். கட்சியைத் தொடங்கி தனது கொள்கை என்ன? லட்சியம் என்பது பற்றிப் பேசிவிட்டு வந்தரனும். அக்கட்சி வளர்ந்த பிறகு மற்ற கட்சியினரை கூப்பிட்டு பேச வைக்கலாம்.

கட்சி முதல் மாநாடு தொடங்கும் போது விஜய் தான் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். விஜய் மீதும் அவரது கட்சியின் மீது ஒரு நலம் விரும்பியாக சீமான் இந்த ஆலோசனையை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் தன் கட்சி முதல் மாநாட்டில் தன் கொள்கை, மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் இதையெல்லாம் பற்றி முதல் மாநாட்டில் பேச வேண்டிய தேவை இருப்பதால் மற்ற கட்சி தலைவர்களை அவர் அழைக்கவில்லை என தெரிகிறது. ஆனால் விஜய் ஸ்மார்ட்டாக யோசிப்பார் என்பதால் முக்கிய தலைவர்களைக் கூட மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Trending News