வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வேட்டையனை தியேட்டரில் பார்க்க 5 காரணங்கள்.. தலைவர் என்ற ஒண்ணே போதும்

Rajini : அக்டோபர் 10ஆம் தேதி ஆன நாளை தமிழ் திரை ரசிகர்கள் பெரிதும் வேட்டையன் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நாளை வேட்டையன் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு முக்கியமான ஐந்து காரணங்களை இந்த தொகுப்பில் இப்போது பார்க்கலாம். முதலாவதாக இது தலைவர் படம்.

ரஜினியின் ரசிகர்கள் எப்போதுமே அவரின் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இதனால் எப்படியும் முதல் நாள் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆகத்தான் இருக்கப் போகிறது. அடுத்ததாக இந்த படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் முக்கிய காரணம்.

வேட்டையன் படத்தை பார்க்க 5 காரணங்கள்

ஏனென்றால் இதற்கு முன்னதாக அவர் இயக்கிய ஜெய் பீம் படம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஆகையால் அவருடைய அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மூன்றாவதாக அமிதாப் பச்சன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக பலருக்கும் ஆச்சரியப்படும் விதமாக பகத் பாஸில் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடித்திருக்கிறார்கள். ஐந்தாவதாக சூப்பர் ஸ்டார் படத்திற்கு அனிருத் இசை பக்காவாக அமையும்.

அந்த காம்பினேஷன் வேட்டையன் படம் எப்படி இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்வாறு எண்ணில் அடங்காத பல சர்ப்ரைஸ்கள் வேட்டையன் படத்தில் நிறைந்திருப்பதால் நாளை கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Trending News