செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

நாலு இல்ல கண்ணா.. அஞ்சு.. அரசு கொடுத்த கிறீன் சிக்னல், பண்டிகையை கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜெய்பீம் பட இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் வேட்டையன். இது நாளை அக்டோபர் 10ம் தேதியன்று வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். தர்பார் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்திலும் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினி, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது போன்றும், அதற்காக காவலர்களுடன் ஆலோசனை நடத்துவது போன்றும், நீதிபதியிடம் உரையாடுவது போன்றும் விறுவிறப்பான காட்சிகளுடன் படம் இருக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அரசு கொடுத்த ட்ரீட்டு..

வேட்டையன் படத்தின் ப்ரீ புக்கிங் வேறு வேகமாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வேட்டையன் பட நிகழ்வில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது வேற வைரல் ஆகி வருகிறது. மேலும், படத்திற்கான முன்பதிவு அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.

அனிருத் இசையில் வெளியான பாடல்கள் துள்ளலான இசையினால் இளைஞர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதனால் இந்த படம் ஒரு பக்கா தியேட்டர் மெட்டீரியல் ஆக இருக்கும் என்று தான் எதிர்ப்பார்க்க படுகிறது.

தற்போது, வேட்டையன் திரைப்படம் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சிறப்பு கட்சிகளுக்கு ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கியுள்ளது. இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது.

Trending News