பாலிவுட் நடிகையை உருகி உருகி காதலித்த ரத்தன் டாட்டா.. கடைசி வரை தனி மரமாய் இருந்ததற்கு இதுதான் காரணமா?

Ratan TATA: புகழ்பெற்ற இந்திய தொழிலதிபர் ரத்தன் டாட்டா புதன்கிழமை இரவு தன்னுடைய கடைசி மூச்சை நிறுத்தி இருக்கிறார். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் ரத்தன் டாட்டா திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வந்தார்.

இவருடைய வாழ்க்கையில் நிறைய காதல் கதைகள் உண்டு. அப்படி பாலிவுட் நடிகை ஒருவரை ரத்தன் டாட்டா உருகி உருகி காதலித்ததை பற்றி இந்தியா டாட் காம் என்னும் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கும் செய்தியை பற்றி பார்க்கலாம்

ரத்தன் டாட்டாவின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக அவரது காதல் வாழ்க்கை, பெரும் விவாதத்திற்கு உரியதாகவே இருந்து வந்தது. அவரது வியக்கத்தக்க வணிக சாதனைகளும், திருமணம் செய்யாத முடிவும் இதற்குக் காரணம்.

பாலிவுட் நடிகையை உருகி உருகி காதலித்த ரத்தன் டாட்டா

பல வருடங்களாக, அவர் பல முறை திருமணத்திற்கு நெருக்கமாக வந்ததாகவும், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த போது கூட காதலித்ததாகவும் கூறியிருந்தார், ஆனால் ஒவ்வொரு முறையும் சூழ்நிலைகள் மாறிவிட்டது. இவரது வாழ்க்கையின் முக்கிய அத்தியாயங்களில் ஒன்று புகழ்பெற்ற பாலிவுட் நடிகை சிமி கரேவாலுடன் இருந்த காதல் தொடர்பாகும்.

சிமி மற்றும் ரத்தன் டாட்டா இருவரும் பல வருடங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இவர்களது நெருக்கமான தொடர்பு இருவரது வாழ்க்கையிலும் முக்கியமான அத்தியாயமாக இருந்தது. டாட்டாவின் மற்ற காதல் கதைகள் போல் இதுவும் திருமணத்தில் முடிவடையவில்லை,

ரத்தன் டாட்டாவுடனான சிமி கரேவாலின் காதல் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிமி, பல இடங்களில் டாட்டாவின் எளிமையை, நகைச்சுவை உணர்வை, மற்றும் திறமையை பற்றி அதிகமாக சிலாகித்து பேசியிருக்கிறார்.

மேலும் ரத்தன் டாட்டாவுக்கு எப்போதுமே பணம் முக்கிய காரணமாக இருந்தது இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

சிமி கரேவால் 1970 இல் ரவி மோகன் என்பவரை திருமணம் செய்தார், ஆனால் 1979 இல் இந்த தம்பதியினர் விவாகரத்து செய்தனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment