5.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லப்பர் பந்து படம் இன்று வரை 30 கோடிகள் வசூலித்து பட்டையை கிளப்பி வருகிறது. இதனிடையே அந்த படத்தில் நடித்த இரண்டு ஹீரோக்களுக்கும், படத்தின் இயக்குனருமான தமிழரசன் பச்சமுத்துக்கும் பெரிய ஜாக்பாட் அடித்து வருகிறது.
அடுத்தடுத்து அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவருக்கும் படங்கள் கமிட்டாகி வருகிறது. இருவரும் 70 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை சம்பளத்தை உயர்த்தி விட்டனர். இப்பொழுது இவர்களையும் தாண்டி கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக மாறிவிட்டார் தமிழரசன் பச்சை முத்து.
இவரைத்தான் சுற்றுப்போட்டு அனைத்து தயாரிப்பாளர்களும் தேடி வருகிறார்கள். இதற்கிடையில் இவர் அடுத்த படம் கமிட்டாகியுள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு ஒரு கோடி கொடுத்து படம் பண்ணுவதற்கு புக் செய்துள்ளனர்.
ஏலத்தை எகிற வைத்த ஏஜிஎஸ் சத்யஜோதி
ஆனால் இப்பொழுது தமிழரசன் பச்சமுத்துவை சத்தியஜோதி மற்றும் ஏஜிஎஸ் நிறுவனங்கள் நூல் விட்டு பார்க்கிறது . கிட்டத்தட்ட மூன்று கோடியிலிருந்து 5 கோடிகள் வரை இவருக்கு ஆபர் கொடுத்து வருகிறார்கள்.
இப்பொழுது பச்சைமுத்து மனதே ஒரு நிலையில் இல்லை. அவருக்கு பந்தைய ஜாக்கி போல் கோடிக்கணக்கில் ஆசையை காட்டி விட்டனர். மற்ற நிறுவனங்கள் 2 முதல் 3 கோடிகள் அதிகமாக கொடுப்பதால் சுதாரித்துக் கொண்ட டான் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு மூன்று கோடிகள் வரை இப்பொழுது உயர்த்தி கொடுத்துள்ளது