அதிகாரத்தை கையில் எடுத்த சேட்டன்.. வேட்டையனில் கைத்தட்டலை அள்ளும் 6 ஹைலைட் காட்சிகள்

Vettaiyan Movie Highlights: சூப்பர் ஸ்டார் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள வேட்டையன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. வழக்கம்போல சோசியல் மீடியாவில் ரஜினியை எதிர்ப்பவர்கள் படம் பார்க்காமலேயே சில நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்துள்ளார்.

இப்படி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் வேட்டையன் படத்தை தியேட்டரில் பார்க்கலாமா அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம். அதன்படி படத்தில் நாம் சிலாகிக்கும்படியான ஆறு ஹைலைட் விஷயங்கள் இருக்கிறது.

அதில் முதலிலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ள மனசிலாயோ பாடல் படம் பார்ப்பவர்களை உட்கார விடாமல் ஆட வைத்திருக்கிறது. நிச்சயம் இது ரசிகர்களுக்கான விஷுவல் ட்ரீட் என்றுதான் சொல்ல வேண்டும்.

வேட்டையன் படத்தின் ஆறு ஹைலைட் காட்சிகள்

இரண்டாவதாக சப்வே காட்சி மூன்றாவது லிப்ட்டுக்குள் வரும் சீன் நான்காவது மஞ்சு வாரியரின் அறிமுக காட்சி அனைத்தும் நிச்சயம் ஆடியன்ஸை கவரும். அதே போல் ஐந்தாவதாக பகத் பாசிலின் கதாபாத்திரம் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.

படம் முழுக்க ரஜினியுடன் வரும் அவர் பார்வையாளர்களை சிரிக்க வைத்து என்டர்டைன் செய்துள்ளார். ஆறாவதாக அனிருத்தின் இசையை தான் சொல்ல வேண்டும். பல படங்களை தன்னுடைய இசையால் தூக்கி நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு.

அதிலும் சூப்பர் ஸ்டார் என்றால் சொல்லவே வேண்டாம். அதன்படி ஹண்டர் பிஜிஎம் உட்பட அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. இப்படியாக படத்தில் இருக்கும் இந்த ஆறு முக்கிய காட்சிகள் வேட்டையனுக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment