புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

திருவள்ளூர் ரயில் விபத்து எதனால் ஏற்பட்டது? உயர்மட்ட விசாரணைக்குழு அமைப்பு

ஒடிஷா ரயில் விபத்து போல் திருவள்ளூர் அருகே கவரபேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 1400க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஒடிஷா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது. மைசூரிலிருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கவரைப்பேட்டையில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து

கர்நாடகம் மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு பாக்மதி அதிவேக ரயில் ஒன்று புறப்பட்ட நிலையில், இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழியாக வெள்ளிக்கிழமை இரவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப் பேட்டை ரயில் நிலையத்தில் 75கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இவ்விபத்தில் 13 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளியாகிறது. இவ்விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவிலை; ஆனால், 19 பயணிகள் படுகாயமடைந்தனர். 1 பேருக்கு லேசான காயமும், ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் சிலரை கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

எதனால் ரயில் விபத்து?

இந்த ரயில் விபத்து எதனால் ஏற்பட்டது என்ற தகவலை ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வர பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டது. ஆனால் ரயில் நிலையம் வந்தபோது. சிக்னல் கோளாறினால், லூப் லைனில் இருந்த சரக்கு ரயில் மீது திடீரென்று மோதி விபத்துகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய சுமார் 1400 பயணிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதேசமயம், மோப்ப நாய்கள் கொண்டு, யாரேலும் விபத்தில் விக்கியுள்ளார்களா? எனத் தேடி வருகின்ற்னர். இந்த நிலையில் விபத்தில் காயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

எப்போது ரயில்வழிப்பாதை சீராகும்?

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து பற்றி முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், தடம்புரண்ட ரயில்பெட்டிகளை அகற்றி, தண்டவாளத்தை சீரமைப்பும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி 16 மணி நேரத்தில் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படும் என்று ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News