Thalapathy Vijay: விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் விவாகரத்தை நடைபெற்று விட்டதாக வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சங்கீதா. விஜய் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டார் என்ற செய்தி அவர் அரசியல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னே பரவத் தொடங்கியது.
அது மட்டும் இல்லாமல் இந்த பிரிவுக்கு காரணம் என ஒரு சில நடிகைகளின் பெயரும் அடிபட்டது. அதற்கு ஏற்றது மாதிரி சமீப காலமாக விஜய் கலந்து கொண்ட சினிமா மற்றும் அரசியல் நிகழ்வுகளில் எதிலுமே சங்கீதா விஜய் பங்கெடுக்கவில்லை.
முன்பெல்லாம் விஜய் படத்தின் ஆடியோ லான்ச், விஜய் நடித்த படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கு சங்கீதா வந்துவிடுவார். கடந்த இரண்டு வருடங்களாக இப்படி எதுவும் நடக்காததால் இந்த சந்தேகம் வலுவானது.
அது மட்டுமில்லாமல் விஜய் தன்னுடைய அப்பா அம்மாவையும் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை தற்போது மனைவியையும் பிரிந்து விட்டார் என செய்திகள் அவருக்கு எதிராக பரவத் தொடங்கியது. தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யும் விழாவில் தன்னுடைய அப்பா அம்மாவை வரவைத்து தன் மீது வைக்கப்பட்ட ஒரு விமர்சனத்தை தகர்த்தெறிந்தார்.
திமுக கோட்டைக்குள் ஆஜரான சம்பவம்
அடுத்து அப்பா அம்மா இருக்கிறார்கள் மனைவி எங்கே போய்விட்டார் என தொடர்ந்து பேசப்பட்டது. இந்த நிலையில் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு சங்கீதா விஜய் நேற்று பொதுவெளியில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அக்கா மகனும், மருமகனுமான முரசொலி செல்வம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய உடல் பெங்களூருவில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நேற்று மாலை சங்கீதா விஜய் நேரில் சென்று மு க செல்வத்திற்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அந்த இடத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சங்கீதாவை பார்த்து வாங்க என்று சொல்வது போல் சைகை செய்கிறார்கள்.
பொதுவாக அரசியல் கருத்துக்களில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விட்டாலும் தங்களுடைய மனைவி அல்லது பிள்ளைகளை அனுப்பி வைப்பது வழக்கம். அப்படித்தான் விஜய் மு க செல்வத்தின் இறுதி அஞ்சலிக்கு சங்கீதாவை அனுப்பி வைத்திருக்கிறார் என தெரிகிறது.