Vettaiyan First Day Collection : ரஜினியின் வேட்டையன் படம் நேற்று ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியானது. தொடர் விடுமுறை என்பதால் இந்த படம் வசூலை அள்ளும் என்று லைக்கா நிறுவனம் திட்டம் போட்டு இந்த படத்தை வெளியிட்டது. கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி இருந்தது.
இந்த சூழலில் முதல் நாளில் கோட் வசூலை வேட்டையன் படத்தால் நெருங்க முடியவில்லை. தமிழ் சினிமாவை பொருத்தவரையில் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றவர்கள் ரஜினி மற்றும் விஜய் தான். இவர்களின் முதல் நாள் வசூல் எப்போதுமே கவனிக்கப்படும்.
அந்த வகையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய்யின் நடிப்பில் வெளியான கோட் படம் முதல் நாள் 126 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் கோட் படம் பொருத்தவரையில் ஏஜிஎஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 380 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது.
வேட்டையன் முதல் நாள் கலெக்ஷன்
மொத்தமாக கோட் படம் 455 கோடி வசூலை பெற்றிருந்தது. இந்நிலையில் முதல் நாளில் ரஜினியின் வேட்டையன் படம் 72 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியா முழுவதும் 30 கோடி வசூலை பெற்றிருக்கிறது. முதல் நாள் எப்படியும் 80 கோடியே தாண்டி வசூல் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் இது சிறு ஏமாற்றம்தான்.
ஆனாலும் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஜெயிலர் படத்தைப் போன்ற ரஜினிக்கு வேட்டையன் படம் சிறந்த ஓபனிங் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஜெயிலர் எதிர்பார்க்காத வசூலை அள்ளிக் கொடுத்தது.
அதனால் சன் பிக்சர்ஸ் படகுழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கி இருந்தனர். ஆனால் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான லால் சலாம் படம் பெரிய அளவில் போகாததால் லைக்காவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் வேட்டையன் படம் கண்டிப்பாக நஷ்டத்தை கொடுக்காத என்பது படத்திற்கு கிடைக்கும் விமர்சனம் பொருத்து தெரிகிறது. ஆனால் பெரிய அளவில் லாபம் கிடைக்குமா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.