Rajini : ரஜினி படம் என்றாலே மாஸ் ஆடியன்ஸ் உள்ள நிலையில் அவர் படத்திற்கு இப்போது சோதனை ஏற்படும் வகையில் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது ரஜினி, டிஜே ஞானவேல் கூட்டணியில் வேட்டையன் படம் சமீபத்தில் தியேட்டரில் வெளியானது.
முதல் நாள் நல்ல கலெக்ஷன் பெற்ற நிலையில் இரண்டாவது நாளில் சற்று சருகளை சந்தித்தது. இதற்கு காரணம் கடந்த வியாழக்கிழமை வேட்டையன் படம் மற்ற படங்கள் எதுவும் வெளியாகாமல் சிங்கிளாக வெளியானது. ஆனால் வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ஜீவாவின் பிளாக் படம் வெளியானது.
இப்போது வேட்டையன் படத்தைக் காட்டிலும் ஜீவாவின் பிளாக் படத்திற்கு வரவேற்பு அதிகம் கிடைத்து வருகிறது. இதுவரை வேட்டையன் படத்திற்கு 900 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது பிளாக் படத்திற்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறதாம்.
ஜீவாவால் வேட்டையன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்
இதன் காரணமாக வேட்டையன் படம் ஒளிபரப்பான திரையரங்குகளில் சில காட்சிகள் பிளாக் படத்தை திரையிட தியேட்டர் ஓனர்கள் முடிவு எடுத்துள்ளனர். ஆகையால் வேட்டையன் படத்தின் வசூல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது. பிளாக் படம் சயின்ஸ் ஹாரர் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
சைலன்டாக வந்த இந்த படம் திரைக்கதையால் இப்போது ரசிகர்களை பெருவாரியாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். ஜீவாவுக்கு ஒரு கம்பேக்காக இந்த படம் அமைந்திருக்கிறது.
பொதுவாகவே சமீபகாலமாக ஹாரர் படங்களுக்கு வரவேற்பு அதிகம் இருந்து வருகிறது. அதன்படி ஜீவாவுக்கும் பிளாக் படம் கை கொடுத்திருக்கிறது. இதனால் இப்போது தலைவர் ரஜினியின் வேட்டையன் படத்தின் வசூலுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.