சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

வன்முறை இல்லாமல் படம் பண்ண முடியாதா? லோகேஷ் கனகராஜ் பதில்.. புளூ சட்டை மாறன் கிண்டல்

லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குனராக வலம் வரும் நிலையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர் பிஸியாக இருப்பதாக தெரிவித்த நிலையில் இதுகுறித்து புளூ சட்டை மாறன் கமெண்ட் அடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கூறப்படும் நிலையில், லோகேஷ் கோலிவுட் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அறியப்படுகிறார். அதன்படி, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கூலி என்ற இயக்கி வருகிறார். இப்படத்தில் அமீர்கான், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், செளபின் சாஹிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்

இப்படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் கைதி-2 என்ற படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே கைதி படம் சூப்பர் ஹிட்டான நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. அதேபோல், விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான லியோ படம் பல கோடி வசூல் குவித்து, விஜய் மற்றும் லோகேஷ் கேரியரிலும் முக்கிய படமாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகத்தையும் லோகேஷ் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஹாலிவுட் சினிமாவைப் போன்று லோகேஷ் கனகராஜும் தனக்கென எல்.இ.யு என்ற யுனிவர்ஸை மையப்படுத்தி வரிசையாக படங்கள் இயக்கி வரும் நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் தனது கமிட்மண்ட்களை முடித்து தரவுள்ளதால் வேறு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. அதன்படி, கைதி-2, விக்ரம் 2, லியோ 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

லோகேஷின் படங்கள் கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் அப்படங்களில் நடிக்க முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நின்றாலும் அவை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறப்பட்டாலும், அப்படங்களில் வன்முறை, போதை பொருள் காட்சிகள் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே லியோ படத்தின் அதிகளவில் வன்முறை காட்சிகள் இருப்பதால், லோகேஷ் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து வன்முறை காட்சிகள் வைப்பது ஏன்?

ஏற்கனவே லோகேஷ் இயக்கும் படங்களில் அதிக வன்முறை இருக்கும் நிலையில் இனி அவர் இயக்கவுள்ள அடுத்தடுத்த படங்களிலும் இதே வன்முறை, போதை பொருட்கள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷிடம் இதுபற்றி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு லோகேஷ், துப்பாக்கி, ரத்தம் இல்லாமல் படம் எடுக்க முடியாது; ஒரு கட்டாயத்தின் பேரில் யுனிவர்ஸை ஆரம்பித்துவிட்டோம், அதை ப்ராப்பராக முடிக்க வேண்டும்அப்போதுதான் அதற்கும் மரியாதை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் படம் இயக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

புளூ சட்டை மாறன் கிண்டல்

இதற்கு பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் தன் எக்ஸ் பக்கத்தில், ’’5 வருஷத்துக்கு நான் ரத்தம் கொடூரம், கத்தி, துப்பாக்கி இல்லாமல் படம் பண்ண முடியாது. அட்வான்ஸ் வாங்கிவிட்டேன்” என்று லோகேஷ் கூறியதைக் கூறி, அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

லோகேஷின் படங்கள் இக்கால இளைஞர்களுக்குப் பிடித்திருந்தாலும் அவை, சமூதாயத்திற்கும் மாணவர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் இருப்பதாகச் சமூக ஆர்வலர்களும், சினிமா விமர்சகர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனவே 5 ஆண்டுகள் தன் யுனிவர்ஸை முடித்துவிட்டு என்ன மாதிரி ஜர்னரில் அவர் படம் எடுப்பார் என்று எல்லோரும் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News