வேட்டையன் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சிலர், வேட்டையன் படம் ஓடக்கூடாது என்ற நோக்கத்தில், வேட்டையன் டிசாஸ்டர் எனும் ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து விட்டு, படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை முன்வைத்தனர். படம் வெளியாவதற்கு முன்பே இந்த வேலையை பார்த்திருக்கிறார்கள் ஒரு சிலரின் ரசிகர்கள்.
ஆரம்பத்தில், தல தளபதி ரசிகர்கள் சண்டை தான் கொழுந்துவிட்டு எரியும். ஆனால் இப்போதெல்லாம் சூப்பர்ஸ்டார் மற்றும் தளபதி ரசிகர்களிடையே தான் சண்டையே. ஆனால், ரசிக சண்டை காரணமாக பாதிக்கப்படுவது என்னவோ அந்த இரு முன்னணி நடிகர்கள் தான்.
விஜய் படங்கள் வெளியாகும் போது ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரோல் செய்வதும் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதும் விஜய் ரசிகர்கள் வன்மத்தை கொட்டுவதுமாக பஞ்சாயத்து ஆரம்பித்து தற்போது வேட்டையன் படத்தின் விமர்சனத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஜய் க்கு வில்லனாக மாறிய அவருடைய ரசிகர்கள்
நடிகர் விஜய் சமீபத்தில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்த போது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம்பெற்று விரைவில் வரவேண்டும் என பிரார்த்தனை செய்தார். லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ரஜினிகாந்த் தனக்கும் விஜய்க்கும் பிரச்சனை என பேச வேண்டாம் என்றும் தங்களுடைய படங்களை கம்பேர் செய்ய வேண்டாம் என்றும் கூறினார். ஆனால், ரசிகர்கள் அவர்கள் இருவருக்குமே தலைவலியாக மாறி வருகின்றனர்.
இந்த நிலையில், #தற்குறிவிஜய்கழகம் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரஜினிகாந்த் ரசிகர்கள் வேட்டையன் படத்துக்கு விஜய் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்து விட்டார்கள். படத்தை டிசாஸ்டர் என சொல்லி விட்டார்கள். அதனால், விஜய்க்கு நாங்கள் ஓட்டு போட மாட்டோம்.
முடிந்த வரை மற்றவர்களையும் எங்கள் குடும்பத்தினரையும் ஓட்டுப் போட விடாமல் தடுப்போம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தேவையற்ற சண்டையை செய்து வருகின்றனர். தற்போது விஜய் க்கு எதிரியாக அவருடைய ரசிகர்களே மாறி விட்டனர்.
இன்னும் ஒரே படத்தோடு விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு சென்று விடுவார். அவர் அரசியலில் வாழ வேண்டும் என்றால் எல்லோரின் வோட்டும் முக்கியம். இது புரியாமல், தளபதி தளபதி என்று கத்திகொண்டே, அவருக்கு தலைவலியாக மாறி இருக்கிறார்கள் இந்த ரசிகர்கள்.