புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

குப்பையை கிளறிக்கிட்டே இருக்க கூடாது, ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரு போல.. ஞானி மாதிரி பேசும் பிரதர்

பிரபல நடிகரான ஜெயம் ரவி, தன்னுடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அண்மையில் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மனைவியான ஆர்த்தி, இந்த முடிவு தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது என்றும், தான் ஜெயம் ரவியுடன் பேச அனுமதி கேட்டும், அவர் நேரம் கொடுக்க வில்லை என்றும் பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இப்படியான ஒரு பிரிவு கோலிவுட்ட்டில் நடந்தது இல்லை. பொதுவாக இருவர் சம்மதத்துடன் பிரிவு நடக்கும். ஆனால் இப்போது ஜெயம் ரவி என்னால் இதற்க்கு மேல் ஒரு நிமிடம் கூட அவருடன் இருக்க முடியாது என்று கூற, ஆர்த்தியோ வாழ்ந்தால் உங்களுடன் தான் வாழுவேன் என்று கூறி வருகிறார். இப்படி இருக்க பிரதர் படத்திற்கான ப்ரோமோஷன் இன்டெர்வியூ ஒன்றில் ஜெயம் ரவி சொன்ன விஷயங்கள் வைரல் ஆகி வருகிறது.

குப்பையை கிளறாதீர்கள்.. வேலையை பாருங்கள்..

இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்கும் நபர் நான். பணத்தின் மீது எல்லாம் பெரிதாக ஆர்வம் கிடையாது. உங்களுக்கு வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரலாம். அது ரிலேஷன் சம்பந்தமான பிரச்சினையாக கூட இருக்கலாம். அப்படி வரும் பொழுது முதலில் அதிலிருந்து விலகி தனிமையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு எல்லாமே கிளியராக புரியும். ஒன்றை நீங்கள் குப்பைக்குள் தேட வேண்டும் என்றால் முதலில் அந்த குப்பை எங்கு இருக்கிறது, என்று தெரிய வேண்டும். அது இல்லாமல் நாம் தேடிக்கொண்டே இருந்தால், கடைசி வரை நாம் தேடிக்கொண்டே தான் இருப்போம்.

ஆகையால், கொஞ்சம் தனியாக உட்கார்ந்து, நாம்தான் இந்தக் குப்பையில் அதனை போட்டோம். அது எங்கே இருக்க வாய்ப்பு இருக்கிறது?. எவ்வளவு அழுத்தத்தில் அதனை நாம் போட்டோம். அது மிக ஆழமாக உள்ளே சென்றிருக்குமா என்று யோசியுங்கள்.

இதையெல்லாம் யோசிக்காமல், நீங்கள் குப்பையையும் வைத்துக்கொண்டு, கிளறியும் கொண்டு, தேடிக் கொண்டே இருந்தால், எப்போது நீங்கள் தேடிய பொருளை பெறுவீர்கள். தேவை இல்லாத குப்பையை கிளறாமல் எந்த குப்பை என்று யோசித்து பார்த்து செயல் படுங்கள்.” என்று ஞானி போல பேசியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள்.. பாவம் எப்படி இருந்த மனுஷன்.. இப்படி ஆக்கிட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News