ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஏன் ஆட்டோ-க்கு மட்டும் 3 சக்கரங்கள்? இது தெரியாமலா இத்தனை நாளா ஆட்டோல போறோம்

என்னதான் பஸ், cab, லோக்கல் ட்ரெயின், ஷேர் ஆட்டோ என்று ஏகப்பட்டவை இருந்தாலும், ஆட்டோ -வில் போவது தனி சுகம் தான். ஆட்டோவின் விலையோ தங்கத்தை போல உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால், ஆட்டோக்காரர்களோ, எங்களுக்கு வருமானமே இல்லை என்று புலம்பி வருகின்றனர்.

ஓலா, ராபிடோ, உபர், நம்ம யாத்ரி என்று பல ஆப் களும் இந்த டாக்ஸி சேவை குள்-வந்துவிட்டது. இவைகள் வந்த பிறகு, சாதாரண ஆட்டோக்காரர்களுக்கு சவாரியை வருவதில்லை என்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம், இந்த ஆப் -கள் மூலம் ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்காவது லாபம் இருக்கா என்று பார்த்தால், அவர்களுக்கும் லாபம் இல்லை. கமிஷன் என்ற பெயரில் அதிகமான தொகையை எடுத்து கொள்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, மீட்டர் ஆட்டோ வந்தால் தான் அனைவருக்கும் லாபமாக இருக்கும் என்றே சொல்லலாம். பொதுவாக இருசக்கரத்திற்கு பிறகு நான்கு சக்கரமே உள்ளது. அப்படி இருக்க 3 சக்கரத்தில் இருக்கும் வண்டி என்றால் ஆட்டோ தான். ஏன் ஆட்டோ-க்கு மட்டும் 3 சக்கரங்கள் இருக்கு என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

3 சக்கரம் எதனால்

3 சக்கரம் இருப்பது பார்ப்பதற்கும் ஒரு வகையில் வித்தியாசமாக அழகாக இருக்கும். ஆனால், இப்படி இருப்பதற்கு காரணம் அழகுக்காக மட்டும் அல்ல. இப்படி வடிவமைப்பதற்கு, சிலவு கம்மி. 4 சக்கரங்களை விட 3 சக்கர வாகனம் அளவில் சிறியதாக இருக்கும் என்பதால் குறுகலான பகுதிகளிலும் வளைந்து சென்று விடும். மேலும் எளிதாகவும் பார்க்கிங் செய்து விடலாம்.

கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாக சென்று விடும். இதற்கு அந்த 3 சக்கர அமைப்புதான் முக்கிய காரணம். வேகமாக செல்ல இது உதவும், அதனால் தான் 3 சக்கரம் என்றும் கூறப்படுகிறது. சாமானியர்களுக்காக உருவாக்க பட்ட இந்த வாகனம் குறைந்த சிலவில், நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்படி வடிவமைக்க பட்டுள்ளது.

Trending News