துஷாரா விஜயன் Fan-ஆ நீங்க.. அப்போ உடனே இந்த 5 படத்தை மிஸ் பண்ணாம பாருங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் சரண்யா டீச்சர் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை நடிகை துஷாரா விஜயன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு தனுஷின் ராயன் படத்தில் தங்கையாக நடித்திருந்தார் துஷாரா விஜயன். அந்த படத்திலும் அவருக்கு வலிமையான கதாபாத்திரம் எழுதப்பட்டு இருந்தது.

ஆரம்பத்திலிருந்து, இவர் இவருக்கு முக்கியத்துவம் இருக்கும் போல்டான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிலையில்,நீங்கள் இவர் ரசிகராக இருந்தீர்களானால், கண்டிப்பாக இந்த படங்களையெல்லாம் மறக்காமல் பாருங்கள்.

மாரியம்மா: தமிழ் சினிமாவில் துஷாரா விஜயனுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் சார்பட்டா பரம்பரை. மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 1970 காலத்து பெண்ணாக நடித்து அனைவரது கைத்தட்டலையும் வாங்கி இருப்பார். மேலும் இவருக்கு JFW சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

ரெனே: நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், துஷாரா விஜயன். திருநானகையின் காதல், பெண் சுயமரியாதை என்று பல விஷயங்களை இந்த படம் பேசும். இந்த படத்தில் பெண் சுயமரியாதையை பற்றி பேசும் ஸ்ட்ரோங் ஆன கேரெக்டரில் நடித்திருப்பார் துஷாரா விஜயன்.
இந்த படத்திற்கும், இவர் தமிழ் நக்ஷத்திரம் அவார்ட் வாங்கினார்.

கவிதா: கழுவேத்தி வீரன் படத்தில் கவிதா எனும் கதாபாத்திரத்தில் துஷார விஜயன் நடித்திருப்பார். கம்மியான காட்சிகளில் நடித்திருந்தாலும், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சுப்புலட்சமி: அநீதி படத்தில் சுப்புலட்சமி என்ற பெண்ணாக நடித்திருப்பார் துஷாரா. இதிலும் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இவருக்கும் அர்ஜுன் தாசுக்கும் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்கவுட் ஆகி இருக்கும்.

துர்கா: ராயன் படத்தில், நடிகர் தனுஷுக்கு தங்கையாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரை வைத்து தான் கதையே நகரும். மேலும் அந்த படத்தில் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாவார்.

வேட்டையன்: சரண்யா டீச்சர் என்று அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் துஷாரா. இவர் தான் அந்த கதையின் மைய்யப்புள்ளி. அநீதிகளை தட்டி கேட்க்கும் ஆசிரியையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் ராயன் படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்ணாகவே நடித்திருப்பார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment