சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

விஜய் மீது ரஜினிக்கு அப்படி என்ன கோபம்? பொங்கும் ரசிகர்கள்.. இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?

தளபதி மீது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகின்றது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ரஜினி விஜய் இடையிலான போட்டி?

சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் போட்டி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் 80 களில் ரஜினி – கமல் இடையே போட்டி இருந்தது. கமல் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க, ரஜினி ஸ்டைலில் முக்கியத்துவம் கொடுத்து அவரவர் விருப்பப்படி படங்களில் நடித்து முன்னணி நடிகர்களாக ஜொலிக்கின்றனர்.

ரஜினிகாந்த் இப்போது வரை முன்னணி நடிகராகவே வலம் வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏஜிஸ்-ன் பிரமாண்ட தயாரிப்பில் உருவான தி கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி இதுவரை ரூ.450 கோடி வசூலித்துள்ளது. இப்படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, ரஜினியின் நடிப்பி தசெ.ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இவ்விரு படங்கள் பற்றி இரு நடிகர்களின் ரசிகர்களும் மாறி மாறி டிரோல் செய்து வருகின்றனர்.

ரஜினிக்கு விஜய் வாழ்த்து!

இந்த நிலையில், ரஜினி சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துகள் தெரிவித்தனர். இதையடுத்து, ரஜினி குணமடைய தவெக தலைவர் விஜய் வாழ்த்தியிருந்தார். இது சமூக வலைதளத்திலும் மீடியாவிலும் கவனம் பெற்று விவாதிக்கப்பட்டது.

இதுவரை மற்ற நடிகர்களுக்கு வெளிப்படையாக எதிலும் கருத்துக் கூறாத விஜய், ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது விரைவில் குணமடைந்த வாழ்த்துகள் கூறியது சினிமா வட்டாரத்திலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வந்ததால்தான் இந்த அறிக்கையை வெளிப்படையாக விட்டிருக்கிறார். இது அரசியல் ஆதாயத்திற்கும் அவரது ரசிகர்களின் நன்மதிப்பை பெறுவதற்குத்தான் என்று நெட்டிசன்கள் விவாதித்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பின் வீட்டிற்கு வந்த ரஜினி தனக்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு எல்லாம் நன்றி கூறியிருந்தார். ஆனால், தவெக விஜய்க்கு மட்டும் நன்றி கூறவில்லை. இது ஏன் அவரை விட விஜய் இளையவர் என்பதாலா? இல்லை தனக்கு சினிமாவில் போட்டியாக இருப்பவர், அரசியலில் தனக்கு முன்பாக வந்துவிட்டார் என்பதனாலா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஜினி ஏன் விஜய்க்கு நன்றி கூறவில்லை

இப்படியிருக்க, சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும், மற்ற துறையில் இருப்பவர்களுக்கும் தனித்தனியாக ரஜினி வாழ்த்து கூற முடியாத காரணத்தால்தான் கூறவில்லை. ஆனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என முதல்வர் வரிசையில் இருப்பவர்கள் அரசியலில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் நன்றி கூறி இருக்கலாம். இதில் ரஜினிக்கு விஜய் மீது காழ்ப்புணர்ச்சியோ கருத்து வேறுபாடோ எதுவும் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் விஜய், அரசியலுக்கு வந்ததற்கு ரஜினி வாழ்த்துகள் கூறியுள்ளார். ’’சூப்பர் ஸ்டார் பட்டம் மாறக்கூடியதுதான்’’ என்று ரஜினி கூறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையே மேற்கூறிய கேள்விக்கு ரஜினி ரசிகர்கள் பதிலாக கூறி வந்த போதிலும், தவெக தலைவராகவும் எல்லோராலும் அறியப்படுகிற விஜய்க்கு ரஜினி ஒரு நன்றி கூறியிருக்கலாம் என்பது விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -spot_img

Trending News