Gossip: மூன்றெழுத்து ஹீரோ தற்போது நடித்து முடித்து ரிலீஸுக்காக காத்திருக்கும் படம் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார். அதற்கு ஏற்றது போல் ரசிகர்கள் மத்தியில் அதற்கு நல்ல எதிர்பார்ப்பும் இருக்கிறது.
எப்போதோ வெளிவந்திருக்க வேண்டிய படம் பெரிய நடிகரால் அடுத்த மாதத்திற்கு தள்ளி போயிருக்கிறது. எப்பொழுது வந்தாலும் சிங்கிளாக தான் வருவேன் என்ற முடிவில் இருக்கும் நடிகர் தற்பொழுது உச்சகட்ட பயத்தில் உள்ளாராம்.
ஏனென்றால் கடந்த மாதம் வெளி வந்த மாஸ் ஹீரோவின் படத்தை மற்றொரு நடிகரின் ரசிகர்கள் போட்டி போட்டு நெகட்டிவ் விஷயங்களை பரப்பினார்கள். அதேபோல் தற்போது வெளிவந்துள்ள உச்சநடிகரின் படத்துக்கும் இந்த நிலைமைதான் ஏற்பட்டது.
உச்சகட்ட பயத்தில் இருக்கும் ஹீரோ
அதேபோல் இப்போதெல்லாம் படம் வெளிவந்து இரண்டு வாரம் தியேட்டரில் ஓடினாலே பெரிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் நெகட் டிவ் விமர்சனங்களை பார்த்துவிட்டு பல ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவதை தவிர்க்கிறார்கள்.
ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பதால் தியேட்டர்களிலும் கூட்டம் குறைவாக இருக்கிறது. பத்தாத குறைக்கு டாப் நடிகர்களின் ஹேட்டர்ஸ் படம் வெளி வருவதற்கு முன்பே அது தோல்வி என கதை கட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.
இது அனைத்து ஹீரோக்களுக்கும் தலைவலியாக மாறிவிட்டது. ஏற்கனவே அந்த ஹீரோவுக்கு சில வருடங்களாக படங்கள் வெளியாகாமல் இருந்தது. இப்போது வெளியாக உள்ள படத்தை வைத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கலாம் என பார்த்தார். ஆனால் அதற்கும் ஆப்பு வந்து விடுமோ என்ற பதட்டம் அவருக்கு வந்துவிட்டதாம்.