தீவிரமாய் ரஜினியைப் பற்றிய வெறுப்பை பரப்பி வருகிறார் டி.ஏ. ஞானவேல் என்று பிரபல யூடியூபர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரபல இயக்குனர் த.செ.ஞானவேல் ரத்த சரித்திரம், பயணம் ஆகிய படங்களுக்கு உரையாடல் எழுதிய நிலையில், கூட்டத்தில் ஒருவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, சூர்யா நடிப்பில் ஜெய்பீம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார்.
இப்படத்தை அடுத்து, ரஜினி நடிப்பில் அவர் இயக்கத்தில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான படம் வேட்டையன். இப்படம் கலவையான விமர்சனங்களுடன் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஜினி நடிப்பில் ஞானவேல் இப்படத்திற்காக முதன் முறையாக இணைந்திருக்கும் நிலையில், அவரது ரசிகராகவும் பட புரமோசனின் அதிகம் காட்டிக் கொண்டார்.
ஆனால், யூடியூபர் மரியதாஸ் இயக்குனர், ஞானவேல் 2020 -ல் தீவிர ரஜினி வெறுப்பை மறைமுகமாக பரப்பி வந்தவர் என்று தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாரிதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
இயக்குனர் TJ ஞானவேல் யார் என்றால் – 2020ல் தீவிர ரஜினி வெறுப்பை மறைமுகமாக பரப்பி வந்தவன் , அதற்கு நடிகர் சூரியாவிற்கு எழுதி கொடுத்து பதிவுகளை வெளியிட வைத்தவரும் ஆவார்! எடுத்துக்காட்டு : 2020 ஜூலை மாதம் இறுதியில் கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் ரஜினி அவர்கள் முருகன் பக்தர்களின் உணர்வுக்கு ஆதரவாக “கந்தனுக்கு அரோகரா” என்று பதிவு செய்தார் – அடுத்த 2 நாளில் கார்த்திக் , சூரியா இருவரின் பதிவில் காக்க காக்க சுற்றுசூழல் காக்க என்று கடவுளை விட சுற்று சூழலை காப்போம் என்று பதிவிட்டு மறைமுகமாக வேலை செய்தவன் இந்த TJ ஞானவேல் தான்..
இன்று சலாம் போட ஒரே காரணம் காசு காசு. அதான் இந்த ஆசாமி! இதில் மறைமுகமாக TJ ஞானவேல் NEET தேர்வுக்கு எதிரான புகையை நெருப்பாக்க முயற்சித்துள்ளான். மீண்டும் பெற்றோர் குழந்தைகளை பதட்டம் அடைய வேண்டும் என்று நோக்கத்தோடு கருத்தை திணித்துள்ளான். ஆனால் இவன் ஒரு நாளும் திமுக எதிராக வாயை திறக்க மாட்டான்! 20 கோடி சம்பளம் வாங்கி கொண்டு கம்யூனிசம் அனைவருக்கும் சமமான வாழ்வு என்று பேசுவதெல்லாம் எவ்வளவு பெரிய பித்தலாட்டம்! ’’ என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி வெறுப்பாளர் எனில் வேட்டையன் பட வாய்ப்பு எப்படி?
ஆனால், சூப்பர் ஸ்டாருக்கு எதிராகவும், சூர்யா, கார்த்திக்கு ஆதரவாகவும் ஞானவேல் பதிவிட்டிருப்பதாக கூறியுள்ள நிலையில் இது எதேச்சையாகவும், எதிர்பாரா விதமாகவும் நடந்த ஒன்றாகக் கூட இருக்கலாம் எனவும், அப்படி ரஜினி வெறுப்பாளராக இருந்தால் ரஜினியை எப்படி, ஸ்கிரீன் பிரசன்ஸ் உடன், வேட்டையன் படத்தில் அதிரடி ஆக்சனில் தூள் கிளப்பும் மாஸ் நடிகராக காட்டியிருக்க முடியும் என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அதேசமயம், ஞானவேல் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
அவரது முந்தைய படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடும் படி காட்சி வைக்கப்பட்டதற்காக, சூர்யாவுக்கும் அவருக்கும் பல மிரட்டல்கள் வந்தன. அப்படி, பல போராட்டங்களை சந்தித்து, இன்று தன் 3வது படத்தில் உச்ச நடிகரை வைத்து படமியக்கும் நிலைக்கு வந்துள்ளதற்கு ஞானவேலில் திறமைதான் காரணம் எனவும், அவர் மரியதாஸ் கூறியுள்ளபடி எல்லாம் இல்லை; அப்படியென்றால் சன்பிக்சர்ஸ் தான் வேட்டையன் படத்தை தயாரித்தது. ஞானவேல் ரஜினி எதிர்ப்பாளர் எனில், அவரை படம் இயக்கவோ, சன் பிக்சர்ஸை அப்படத்தை இயக்கவோ அவர் சம்மதித்திருக்கவோ மாட்டார் அல்லவா? ரஜினியின் ஆதரவாளர்களும் நெட்டிசன்களும் கூறி வருகின்றனர்.