2014 கத்தி படத்தில் ஆரம்பித்து இன்று வேட்டையன் படம் வரை லைக்கா 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக அவர்களுக்கு கெட்ட நேரம் பிடித்தது போல் பல விஷயங்களில் மாட்டிக்கொண்டு முழித்து வந்தனர்.
அமலாக்கத்துறை அந்த நிறுவனத்திடம் கணக்குகள் கேட்டு ரைடு செய்தனர். அதன் பின் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியிலும் மாட்டிக்கொண்டனர். தொடர்ந்து பெரிய பெரிய ப்ராஜெக்ட்கள் கைவசம் இருந்ததால் எதிலயுமே கவனம் செலுத்த முடியாமல் திணறி வந்தனர்.
சந்திரமுகி 2, லால் சலாம், இந்தியன் 2 என அடுத்தடுத்து தொடர்ந்து பெரிய படங்கள் எல்லாம் அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு பல ப்ராஜெக்ட் களிலிருந்து வெளியே வந்தனர்.கைவசம் இருக்கும் படத்தை மட்டுமே தயாரித்து வந்தனர்.
2 பிரச்சனைகளையும் தூக்கி எறிந்த சுபாஸ்கரன்
வேட்டையன், விடாமுயற்சி என அடுத்தடுத்து பெரிய ப்ராஜெக்டுகளை கையில் எடுத்தனர். எல்லாமே பட்ஜெட் அதிகம் என்பதால் நிதி இல்லாமல் வெளிநாட்டு சூட்டிங் மற்றும் பாடல் காட்சிகளை ஒதுக்கி வந்தனர். இந்தியன் 2 படத்தால் அவர்களுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டது.
இப்பொழுது வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படம் அவர்களுக்கு நல்ல வசூலை பெற்றுத் தந்துள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் லைக்காவின் கஷ்டத்தை எல்லாம் போக்கியுள்ளது. கிட்டதட்ட இன்று வரை 140 கோடிகள் வசூல் செய்து விட்டது. டிஜிட்டல், சேட்டிலைட் என நல்ல விலைக்குப் போய் உள்ளது. இப்பொழுது விடா முயற்சி படத்திற்கு ரூட் கிளியர் ஆகிவிட்டது