ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்.. வேறொரு பெண்ணுடன் தொடர்பு?

உலக அழகி பட்டம் வென்று இந்தியா முழுவதும் உள்ள மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய். இவர், உலக அழகி பட்டம் வென்ற பின், தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, எம்ஜிஆர் குறித்து தமிழில் வெளியான இருவர் திரைப்படத்தில் நடத்ததின் மூலம் நடிகையாகவும் தனது கெரியரைத் தொடங்கினார்.

அவர் தமிழ் மொழியைக் காட்டிலும் இந்தியில் அதிக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி பாலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகையாக மாறினார். இவரை பாலிவுட்டில் பல நடிகர்களுடன் இணைத்துப் பேசி வதந்திகள் வந்த நிலையில், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் உண்டு.

வீட்டை விட்டு வெளியேறிய ராய்

இந்நிலையில், சந்தோஷமாக இருவரும் வாழ்க்கையை கொண்டு சென்று வரும் வேளையில், சிலர் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இவர்கள் இருவரும் விரைவில் பிரியப் போகின்றனர் என வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

அதாவது உண்மையில் எதோ ஒரு பிரச்சனை, அதனால் இப்படி பேசிக்கொண்டாள் பரவா இல்லை. இல்லாத பிரச்சனையை உருவாக்கி, இந்த நெட்டிசன்கள் நீதிமன்றமாக மாறி, அவர்களுக்கு விவாகரத்து செய்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு அழைக்கின்றனர்.

இப்படி பட்ட சூழ்நிலையில், ஏராளமான சீரியல்கள் பார்த்து மூளை குழம்பி போன ஒரு சிலர் ஒரு புது வேலையை பார்த்துள்ளனர். தற்போது அபிஷேக் பச்சனுக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதாக தகவல் பரப்பி வருகின்றனர். மேலும் இதனால் பிரச்சனை முற்றி, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் ஐஸ்வர்யா ராய்.. அட பாவமே உலக அழகிக்கே இந்த நிலையா என்று பேசிக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் 100 முறை கடந்து சென்றுவிட்டனர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன். போதும், இவர்களுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்து சலிப்பாக இருக்கிறது, என்று இதையெல்லாம் இப்போது கண்டுகொள்வதே இல்லை.

- Advertisement -

Trending News