விடாமுயற்சி படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி ரிலீஸ் என்று சொன்னார்கள், ஆனால் இப்பொழுது இந்த படம் தீபாவளிக்கு இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். இந்த படத்தை ஜனவரி மாதம் பத்தாம் தேதி பொங்கலுக்கு வெளியிடுகின்றனர்.
ஏற்கனவே பொங்கலுக்கு குட் பேட் அக்லி வெளிவரும் என படம் ஆரம்பிக்கும் போது ஆதித் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். ஆனால் இந்த படம் 2025 ஏப்ரல், மே மாதம் சம்மர் வெளியீடாக பிளான் பண்ணி விட்டனர். இதற்கு இடையில் பொங்கல் ரேசில் பல படங்கள் வெளி வருவதால் விடாமுயற்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.
ஷங்கர் ராம்சரனை வைத்து இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர், இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. ராம் சரணுக்கு ஆந்திராவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இந்த படமும் 2025 பொங்கலுக்கு வெளிவருகிறது. அஜித்துக்கு ஆந்திரா பக்கம் பெரிய மார்க்கெட் இல்லை.
என் ஏரியா நுழையாதேன்னு ஏ கேக்கு பறந்த வார்னிங் பெல்
அஜித்துக்கு இப்பொழுது சிக்கல் என்னவென்றால் ஓவர் சீஸ், அதாவது வெளிநாட்டில் விடா முயற்சி படத்தை ரிலீஸ் செய்வதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அஜித்தை விட ஓவர் சீசில் ராம்சரனுக்கு பெரிய மார்க்கெட் நிலவி வருகிறது. அதனால் கேம் சேஞ்சருடன் விடாமுயற்சி வெளி வந்தால் வெளிநாட்டில் அஜித்துக்கு சிக்கல் தான்.
ஏற்கனவே விடாமுயற்சி படம் பல இன்னல்களை தாண்டி ஷூட்டிங் நிறைவு பெற்றது. இந்த படத்திற்கு லைக்கா படாதபாடு பட்டது. இப்பொழுது படம் முடிந்த பிறகும் ரிலீசில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தீபாவளி ரிலீஸ் என்றனர் இப்பொழுது பொங்கலுக்கு தள்ளி வைத்தும் பிரச்சனை தொடர்கிறது.