வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மழை, புயல் வர்றது கூட எங்களுக்கு பயம் இல்ல.. நீங்க போடுற பிளாஷ் நியூஸ் பார்த்தா தான்டா பீதி ஆகுது, மழை மீம்ஸ்

Cheenai Rain Memes: சென்னையில் நேற்று மழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்த நிலையில் இன்று என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் இருக்கின்றனர்.

rain-memes
rain-memes

ஏற்கனவே இது குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும் நேற்று மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தான் வந்தது.

rain-memes
rain-memes

அதைத்தொடர்ந்து இன்று மிக கனமழை இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். இது ஒரு புறம் இருக்க நியூஸ் சேனல்களில் மழையின் தாக்கம் குறித்து காட்டப்படும் காட்சிகள் ஒவ்வொன்றும் இன்னும் பீதியை கிளப்புகிறது.

rain-memes
rain-memes

வழக்கமாக சென்னை டிசம்பர் மாதத்தில் தான் பதட்ட நிலையில் இருக்கும். ஆனால் இந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே மழை வந்துவிட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

rain-memes
rain-memes

இதை இணையதளவாசிகள் ஜாலி கமெண்ட் ஆக கொடுத்து வருகின்றனர். பண்டிகை நாள் வரும் போது நீ ஏன்டா குறுக்க வந்த என கிண்டல் அடித்து வருகின்றனர்.

rain-memes
rain-memes

அதேபோல் இந்த தீபாவளிக்கு சென்னை மக்கள் டிரஸ் வாங்காம ரெயின் கோட்டு தான் வாங்கணும் போல என பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது. இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை மீம்ஸ் இதோ.

rain-memes
rain-memes
- Advertisement -

Trending News