சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பக்கா ஆக்சன்.. நெருங்க முடியுமா? சூர்யா – RJ பாலாஜி கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா45’ படத்தின் சுவாரஸ்ய தகவல்!

கோலிவுட் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ள சூர்யா45 படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகின்றன.

சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் கங்குவா. வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புரமோசன் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இப்படத்தின் பரபரப்பும், இதன் பிரமாண்டம் பற்றியும் ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றன. அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா44 படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா

இந்த நிலையில், சமீபத்தில் யாருமே எதிர்பாராத விதமான ஒரு தகவல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தியது.ஆம்! அதுதான், சூர்யா45 படம் பற்றிய தகவல். மணிரத்னம், லிங்குசாமி, செல்வராகவன், ராம் கோபால் வர்மா, சிறுத்தை சிவா, ஹரி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் பணியாற்றிய சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலை அவ்வளவு எளிதியில் சூர்யா ரசிகர்களே நம்பவில்லை. ஆனால், கடந்த 15 ஆம் தேதி இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி, சூர்யா 45 பட போஸ்டர் வெளியானது. அதில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் உருவாகவுள்ளது என அறிவிக்கப்பட்டது. இப்போஸ்டரில் அரிவாள், வேல் ஆகியவை இடம்பெற்றிருந்தது. அதனால், இப்படம் வேல் படம் போல் கிராம பின்னணியைக் கொண்ட ஆக்சன் படமாக இருக்கலாம் எனவும், ஆன்மீகமும் கலந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சூர்யா 45 படத்திற்கான ஷூட்டிங் லோகேசன் இடங்களை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். தீயா வேலை செய்யனும் குமார் என்ற படத்தின் மூலம் நடிகராகி, எல்.ஜே.படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்ட ஆர்.ஜே. பாலாஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் சூர்யா 45 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூர்யா -45 மாஸ் காட்டி வசூல் அள்ளும் முயற்சி

ஆர்.ஜே.பாலாஜி படங்கள் என்றாலே நக்கல், நையாண்டிகளுக்கு குறைவிருக்காது. ஆனால், சூர்யா எல்லாவித கேரக்டரிலும் கலந்து கட்டி, நடிப்பவர் என்பதால் இப்படத்தில் சூர்யாவுக்கு என்ன ரோல், இது எம்மாதிரியான கதை, எப்படிப்பட்ட கேரக்டர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சூர்யா 45 பட போஸ்டரில் எல்லாமே கறுப்பு பேக் கிரவுண்டில் இருப்பதால் இப்படத்தின் தலைப்பும் கருப்பு என இருக்கலாம் என தகவல் வெளியாகிறது. ஆர்.ஜே.பாலாஜியின் கேரியரில் மிக முக்கியமான படமாக இப்படம் இருப்பதால், எப்படியும் பக்கா ஆக்சன் படமாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவை மாஸாக காட்டி, வசூலிலும் பெரிய ஹிட்டாக்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யாவுக்கு கடந்த 2 ½ ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகாத நிலையில் புறநானூறு படமும் சிவகார்த்திகேயனுக்குச் சென்றது. தற்போது கங்குவா ரிலீஸாகவுள்ள நிலையில்,வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து முடிப்பதற்கு முன்னதாக சூர்யா 45 படத்தில் நடித்துக் கொடுக்க இருப்பதாகவும் இப்படமும் பக்கா ஆக்சன் கமெர்சியல் படமாக உருவாக்கப்படவுள்ளதாகவும், இப்படத்திற்குப் பின் முன்னணி நடிகர்களை வைத்து ஆர்.ஜே. படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகிறது.


- Advertisement -

Trending News