வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024

விமலை ஓரங்கட்டி கலங்கடித்த கருணாஸ்.. ஓடிடியில் கவனம் பெற்ற போகுமிடம் வெகு தூரம் இல்லை, விமர்சனம்

Pogumidam Vegu Thooramillai Movie Review: கடந்த சில வருடங்களாக விமலுக்கு பெரிய அளவில் வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. பல்வேறு சறுக்கல்களை சந்தித்த அவர் தற்போது போகுமிடம் வெகு தூரம் இல்லை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்திருக்கும் இப்படம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியானது. தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ள இப்படத்தின் விமர்சனத்தை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் சேர்த்து இருக்கும் விமலுக்கு கையில் சுத்தமாக பணம் இல்லை. அமரர் ஊர்தி ஓட்டுநராக இருக்கும் இவர் இறந்தவர் ஒருவரின் உடலை திருநெல்வேலிக்கு எடுத்து செல்லும் பொறுப்பை ஏற்கிறார்.

டெலிவரி செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் இக்கட்டான சூழ்நிலையில் இந்த சவாரியை அவர் மேற்கொள்கிறார்.. இறந்து போனவருக்கு இரண்டு மனைவிகள். அவருடைய பிள்ளைகள் யார் கொள்ளி வைப்பது என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஓடிடியில் கவனம் பெற்ற போகுமிடம் வெகு தூரம் இல்லை

இந்த சூழலில் வண்டியில் பயணம் செய்யும் விமலிடம் லிப்ட் கேட்டு வருகிறார் கருணாஸ். அவரால் பல தொல்லைகள் ஏற்படுகிறது. அதை விமல் எப்படி சமாளித்தார்? உடலை சொந்த ஊருக்கு பத்திரமாக எடுத்துச் சென்றாரா? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.

படம் ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பாக செல்லும் திரைகதை இரண்டாம் பாதியில் கொஞ்சம் சறுக்கினாலும் இறுதியில் ஆடியன்ஸை திருப்திப்படுத்தி இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் தொடங்கி கதையின் போக்கு எதிர்பார்ப்பு கலந்த சுவாரசியத்தை கொடுத்துள்ளது.

இதற்காகவே இயக்குனரை பாராட்டி இருக்கலாம். அதை உணர்ந்து வழக்கமான தன்னுடைய யதார்த்த நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார் விமல். ஆனால் அவரை மிஞ்சும் அளவுக்கு ஒரு கனமான கதாபாத்திரம் கருணாசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவரும் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிரட்டி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பல இடங்களில் அவருடைய நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி கைதட்டலையும் அள்ளி இருக்கிறது. அதிலும் இறுதி காட்சியில் கலங்க வைத்திருக்கிறார் கருணாஸ்.

இவர்களுக்கு அடுத்தபடியாக இறந்தவரின் மகன்களாக வரும் ஆடுகளம் நரேன் பவன் ஆகியோரும் மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளனர். இதுவே இயக்குனர் கண்ட வெற்றி. இப்படியாக தற்போது ஆடியன்ஸின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது போகுமிடம் வெகு தூரம் இல்லை.

- Advertisement -spot_img

Trending News