பிரபல யூடியூபர் உடன் Live-in Relationship-ல இருக்கேனா? கூப்டு வச்சி பதில் சொன்ன சுனைனா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை சுனைனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சொந்த ஊராக கொண்ட நடிகை சுனைனா லட்சணமான முக அழகோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்து 2008 ஆம் ஆண்டு சுனைனா நடிகர் நகுல் உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் காதலில் விழுந்தேன்.

இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சுனைனாவின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக நாக்க முக்கா என்ற பாடலின் மூலம் தமிழ்நாட்டு முழுக்க பிரபலம் ஆனார்.

மார்க்கெட் இழந்த சுனைனா

ஆனால் ஒருகட்டத்தில், மார்க்கெட்டை இழந்து காணாமல் போனார். அவர் நடிக்கும் எந்த படங்களும் பெரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பலர் சுனைனாவின் நடிப்பை பாராட்டினார்கள்.

இதை தொடர்ந்து தற்போது அவர் நடித்திருக்கும் படம், ராக்கெட் டிரைவர் எனும் படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் தற்போது செய்து வருகிறார்கள். அந்த வகையில் இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி கேள்வி எழுப்ப பட்டபோது, முறைக்கிறார். தொடர்ந்து ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று பரவும் செய்தி உண்மையா என்று கேட்கப்பட்டது.

அப்போது திடீரென டென்சன் ஆகி, ஏன் எல்லாரும் இதையே கேட்கிறீர்கள்.. நான் யாரையும் காதலிக்கவில்லை. எனது காதல் சினிமாவுக்கு மட்டும் தான் என்று கூறியுள்ளார். முன்னதாக இவர் துபாயை சேர்ந்த, பிரபல யுட்யூபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்க்கு சுனைனா தரப்பிலிருந்து எந்த பதிலும் கொடுக்க படவில்லை. இதை தொடர்ந்து இந்த வதந்தியை பலரும் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில், தற்போது அவர் கூறியிருக்கும் இந்த பதில் மூலமாக பரவிய வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

Leave a Comment