திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

தமிழ் சினிமால 1000 கோடி வராது.. அதுக்கு காரணமே அஜித், விஜய்தான்! கொட்டித் தீர்த்த பிரபலம்

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் பல கோடிகள் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்தாலும், அவர்கள் நடிக்கும் படங்கள் மட்டும் ஏன் படங்கள் 1000 கோடி வசூல் செய்வதில்லை என்ற கேள்வி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதுபற்றி பிரபல சினிமா விமர்சகர் பளிச் என்று பதில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் படங்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில், பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மாலிவுட், சண்டல்வுட் என பல மொழிகள் இருந்தாலும் தற்போது வெளியாகும் முன்னணி நடிகர்கள், சூப்பர் ஸ்டார்களின் படங்கள் அனைத்தும் பான் இந்தியா படமாக இந்திய அளவில் மொழிமாற்றம் அல்லது டப்பிங் செய்து வெளியாகின்றன.

சில நடிகர்களின் படங்கள் இந்தியாவைத் தாண்டி சர்வதேச அளவில் ரிலீஸாகி வருகின்றன. இந்தியாவில் பாலிவுட் சினிமா 43 சதவீதம் வருவாய் ஈட்டுகிறதென்றால், டோலிவுட் என்ற தெலுங்கு சினிமாவும், கோலிவுட் என்ற தமிழ் சினிமாவும் 36 சதவீதம் வருவாயை சினிமாவில் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகின்றன. ஆனல், தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான படங்கள் தயாரிக்கப்பட்டு, தியேட்டரில் ரிலீசாகின்றன.

தமிழ் சினிமா

ஆனால், தமிழில் உருவாகும் படங்கள் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்ததில்லை என்ற வருத்தம் தமிழ் ரசிகர்களுக்கு உண்டு. இதுவரை, ரஜினியின் 2.0, ஜெயிலர்( 600 கோடிக்கு மேல் வசூல்), கமலின் விக்ரம் ( ரூ.410 கோடி வசூல்) மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ( ரூ.400 கோடிக்கு மேல் வசூல்) ஆகிய படங்கள் வசூல் சாதனை படைத்து முன்னணியில் உள்ளன. சமீபத்தில் வெளியான விஜயின் தி கோட் படம் ரூ.1000 கோடி வசூலிக்கும் என பிரேம் ஜி உள்ளிட்டோர் கூறிய நிலையில் இதுவரை 400 கோடி மேல் தான் வசூலித்துள்ளது.

அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸான வேட்டையன் படம் இதுவரை ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஆனால், டோலிவுட்டில் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் குவித்தன. இந்தி சினிமாவில் சில ஆண்டுகளாகவே எந்த படமும் ஹிட்டாகாமல் இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான், பதான் ஆகிய ரெண்டு படங்களும் ரூ.1000 கோடி மேல் வசூலித்தன.

1000 கோடி வசூல் ஏன் இல்லை? சினிமா விமர்சகரின் கருத்து

இந்த நிலையில் புதுமைக்கும் சாதனைக்கும் படைப்பிற்கும் பெயர்போன தமிழ் சினிமாவில் இருந்து படங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரானாலும் ஏன் வசூலி சோடைபோகிறது என்பது பற்றி வலைப்பேச்சு அந்தணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ”தமிழில் வரும் படங்களெல்லாம் 1000 கோடி அடிக்கும் என சொல்கிறார்கள். ஆனால் அந்த வசூலுக்கு மட்டும் வாய்ப்பே கிடையாது. பிறமொழிப் படங்கள் ஏன் ரீச் ஆகுது. நம்மால் நெருங்க முடியலீனா, நம் ஹீரோக்கள் ஒத்துழைப்பை பொருத்துள்ளது. மார்கெட்டில் இறங்கி, ஒவ்வொரு மாநிலமாக போய் படத்தின் புரமோசன் செய்தால் அது நன்றாக போகலாம்.

அஜித், விஜய் மீது குற்றச்சாட்டு

ஆனால் இதை யாருமே செய்வதில்லை. அஜித் தன் படத்தின் பெயரை கூறவே வெட்கப்படுகிறார். அப்படி செய்வதையே அவர் தவறாக நினைக்கிறார். அவர் தன் சொந்த விசயங்களுக்கு மட்டும் அதை செய்கிறார்.

விஜய் வேறு மாநிலத்திற்கு செல்கிறாரா? இது கனவு ஆனால் எதையும் செய்யாமல் அப்புறம் எப்படி வசூல் குவிக்கும்? தெலுங்கில் மட்டும் ஒரு படத்திற்கு ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் என எதிர்பார்ப்பு எழுகிறது புரமோசன் செய்கிறார்கள் என்றால், ஹீரோக்கள் சம்பளம் குறைவாக வாங்கி படத்திற்கு செய்கிறார்கள் இங்கு பட்ஜெட்டில் முக்கால் வாசி சம்பளமாகவே ஹீரோக்கள் வாங்கிவிடுகிறார்கள் அப்புறம் எப்படி படத்திற்கு செலவு செய்வர்?

தெலுங்கில் பெருந்தன்மை உடன் நடந்துகொள்கிறார்கள். ரொம்ப கம்பியாக அட்வான்ஸ் பெறுகிறார்கள். ரூ.1 கோடி அட்வான்ஸ் பெற்று படம் வெளியான பின் மீதி ரூ.49 கோடி பெறுகிறார்கள். இதனால் புரடியூசர்ஸ் சேஃப்டி அங்கு படமும் நன்றாக வருகிறது. வசூல் குவிகிறது. ஆனால் தமிழில் அப்படி அல்ல, சம்பளத்தில் பாதியை முன்பணமாக பெற்றுவிட்டு டப்பிங்கிற்கு முன் மொத்தமும் பெறுகிறார்கள். ஆனால் படத்திற்கு புரமோசனோ, விளம்பரமோ செய்ய மறுக்கிறார்கள்” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தரமாக படங்கள் வெளி வந்து மற்ற மொழி சினிமா கலைஞர்கள் நம்மை பிரமிப்பாக பார்த்த காலம் போய், இன்று மற்ற மொழிப் படங்களையே பிரமித்து பார்க்கும் நிலைக்கு வந்துள்ளதற்கும், தமிழில் பிரமாண்ட பட்ஜெட் படமெடுத்தாலும் அதிக செலவுள்ள படமாக அதில் காட்சியமைப்புகள் இல்லாமல் போவதற்கும், இங்குள்ள நடிகர்களின் சம்பளம் தான் முக்கிய காரணம் எனவும், அப்படங்கள் இன்னும் ரூ.1000 கோடி வசூலை பெறாததற்கும் மற்ற மொழிப் படங்கள் மாதிரி அப்படத்தில் நடிக்கும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களே புரமோசன் செய்யாததும் தான் காரணம் என ரசிகர்களும் கருத்துகள் கூறி வருகின்றனர்.

ajith-anthanan

- Advertisement -spot_img

Trending News