vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய் – CinemaPettai.com நிறுவனர். கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமா செய்திகளை ரசிகர்களுக்கு கொண்டு சென்று வருகிறார். Google News approved publisher, 1.3 மில்லியன் YouTube subscribers, 1.3 மில்லியன் Facebook subscribers,1.4 லட்சம் Instagram followers உடன் தமிழ் சினிமா உலகில் நம்பகமான தகவல் ஆதாரமாக விளங்கி வருகிறார்.

View all posts →

சன் டிவியில் டாப் டக்கர் ஆக போகும் 3 சீரியல்கள்.. ராமரிடம் இராவணனை சரண்டராக்க போராடும் ஆஞ்சநேயா

Sun tv Serial: எத்தனை சேனல்கள் வந்தாலும் சன் டிவியை யாரும் அசைக்க முடியாது என்பதற்கு ஏற்ப சீரியல்கள் மூலம் ஒய்யாரமான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது. யார் இல்லை என்றாலும் நாங்கள் கெத்து தான் என்பதற்கு ஏற்ப எதிர்நீச்சல் சீரியல் முடிந்த பிறகும் சன் டிவியில் உள்ள சீரியல் டாப் டக்கர் ஆக போகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் அதிகப்படியான டிஆர்பி ரேட்டிங்கை பெற்று முதல் ஆறு இடத்தை தக்க வைத்திருக்கிறது சன் டிவி.

தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான மூன்று சீரியல்கள் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இடம் பிடித்து வருகிறது. அதில் தினமும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இராமாயணம் சீரியலுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து பார்ப்பதற்கு பயங்கரமான ஒரு சீரியலாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதிலும் தற்போது சுவாரசியமாக ராவணனை எப்படியாவது ராமரிடம் சரண்டராக வைக்க வேண்டும் என்று ஆஞ்சநேயா போராடி வருகிறார்.

சீதையை கடத்திட்டு போன ராவணன் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பிரச்சனையை கொடுக்கும் அளவிற்கு அட்டகாசம் பண்ணி வருகிறார். அந்த வகையில் ஆஞ்சநேயரின் வாலில் நெருப்பை பற்ற வைத்து குடச்சல் கொடுக்கிறார். இதில் ஆஞ்சநேயரை காப்பாற்றி இராவணனை அழிக்க ராமர் அவதாரம் எடுக்கப் போகிறார். தற்போது இந்த ஒரு பரபரப்பான சீரியல் மக்களிடத்தில் அதிகமான வரவேற்பு பெற்று இருக்கிறது.

இதனை அடுத்து மூன்று முடிச்சு சீரியலில் நந்தினி வாழ்க்கையை பாழாக்கி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் சூர்யா குடித்துவிட்டு சுயநினைவை இழந்து ஒட்டுமொத்த குடும்பத்திலும் நந்தினியை பலியாடாக சிக்க வைத்து விட்டார். அந்த வகையில் சூர்யாவின் அப்பா பிளாஷ்பேக் கதையை நந்தனிடம் சொல்லி சூர்யாவை மாற்றுவதற்கு நீ தான் சரியான ஆளு. அதனால் நீ கூடவே இருந்து இந்த வீட்டில் என்னுடைய மகளாக இருக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். வழக்கம்போல் நந்தினி, சூர்யாவை காப்பாற்றுவதற்காக அந்த வீட்டில் குடியேறப்போகிறார்.

அடுத்ததாக மல்லி சீரியலில் ஒரு கதாநாயகி என்றால் எப்பொழுதும் துணிச்சலுடனும் எதிரிகளை துவசம் பண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்புக்கு ஏற்ப மல்லி அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்து வெண்பாவை காப்பாற்றி விட்டார். அந்த வகையில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று கதிரேசனை ஜெயிலுக்கு அனுப்பி விஜய்க்கு நம்பகத்தக்க ஒரு மனைவியாக விஜய் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இப்படி சன் டிவியில் இந்த மூன்று சீரியல்கள் டாப் டக்கர் என்று சொல்லும் அளவிற்கு ஜொலித்துக் கொண்டு வருகிறது.

Leave a Comment