Memes: வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மாச கடைசியில் பண்டிகை வருவதே பேரதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பல பேருக்கு போனஸ் வரவில்லை என்ற கவலை வேறு.
அதை வைத்து தான் தீபாவளியை ஓட்ட வேண்டும் என்று இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் செலவுகளை எண்ணி இப்போது பீதியில் இருக்கின்றனர். ஏனென்றால் மாதம் தொடங்கி 10 நாள் சென்றாலே மொத்த சம்பளமும் காலியாகிவிடும்.
கார் லோன், வீட்டு லோன், இஎம்ஐ என வீட்டு செலவுக்கு கூட திண்டாடும் நிலைமையில் தான் மிடில் கிளாஸ் மக்கள் இருக்கின்றனர். இதில் மாச கடைசியில் தீபாவளி வந்தால் என்னதான் செய்வார்கள்.
போனஸ் தரலைனா கூட பரவால்ல சம்பளத்தையாவது முன்னாடி போடுங்க என சில பேர் புலம்பி வருகின்றனர். மேலும் நெட்டிசன்கள் ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு ஆயிர கணக்கில் பணம் தேவைப்படுது.
இதையெல்லாம் பார்க்கும் போது கிருஷ்ணர் நரகாசுரனை மன்னித்து விட்ருக்கலாம்னு தோணுது என அலப்பறை செய்து வருகின்றனர். ஒரு விதத்தில் பலரின் மனநிலையும் இதுவாக கூட இருக்கலாம்.
திண்டாடுறவனுக்கு கொண்டாட்டம் கேட்குதா எனவும் ஜாலி மீம்ஸ் வைரலாகி வருகிறது. இப்படி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் சில தீபாவளி மீம்ஸ் தொகுப்பு இதோ.