Vijay: விஜய் தன்னுடைய நடிப்பால் தளபதி என்ற பெயரை மக்கள் இடத்தில் பதித்து ஆட்ட நாயகனாகவும் வசூல் மன்னனாகவும் ஒரு முத்திரையை வாங்கிக் கொண்டார். அந்த அளவிற்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த விஜய் தற்போது அடுத்த கட்ட முன்னேற்றமாக அரசியலிலும் ஜெயிப்பதற்கு தயாராக இருக்கிறார்.
தற்போது இவரை நம்பி எத்தனை கோடி வேணாலும் நாங்கள் இறக்க தயார் என்று தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியலில் இறங்குவதால் நடிப்புக்கு பிரேக் விடப் போகிறேன் என்று கூறியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தளபதி 69 படத்தை இயக்குனர் எச் வினோத்துடன் கமிட்டாகி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் விஜய் ஆரம்பகட்டத்தில் அவருடைய பிசியான கால்ஷீட் பிரச்சனையால் சில படங்களை தவற விட்டிருக்கிறார். அது என்ன படங்கள் அதில் யார் நடித்திருக்கிறார் என்பதை பற்றி சில தொகுப்பாக பார்க்கலாம்.
சண்டைக்கோழி: லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு சண்டைக்கோழி திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகவும் மக்கள் கொண்டாடும் அளவிற்கு குடும்பப் படமாகவும் வந்ததால் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தை முதலில் விஜய் தான் நடிப்பதற்கு லிங்குசாமி கதையை எழுதி இருக்கிறார். ஆனால் விஜய் பிசியாக இருந்ததால் இந்த படத்தை தவற விட்டுவிட்டார்.
ரன்: லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படத்தில் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் காதல் கலந்த ஒரு அதிரடி படமாக லிங்குசாமி கதையை எழுதினார். ஆனால் விஜய் நடிக்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் இப்படம் 100 நாளுக்கு மேல் ஓடி சூப்பர் செஞ்சுரி ஆக வெற்றி பெற்றது.
முதல்வன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் முதல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த படத்தில் விஜய் நடிப்பதற்கு தான் சங்கர் முடிவெடுத்திருந்தார். ஆனால் விஜய் சரியாக கால் சீட் கொடுக்க முடியாததால் படம் கைநழுவி போய்விட்டது.
தூள்: தரணி இயக்கத்தில் விக்ரம் மற்றும் ஜோதிகா நடிப்பில் 2003 ஆம் ஆண்டு ஒரு ஆக்சன் கலந்த படமாக வெளிவந்தது. ஆனாலும் இந்த படத்தில் விஜய் நடிப்பதற்கு பதிலாக விக்ரம் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் இப்படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றுவிட்டது.
அனேகன்: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த அனேகன் படத்திலும் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் இதைவிட மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தை நடிக்க மறுத்துவிட்டார்.
தீனா: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படம் ஒரு ஆக்ஷன் கலந்த படமாக அஜித்துக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்துக்கு பிறகு தான் தல என்ற பட்டத்துடன் மக்கள் தூக்கிக் கொண்டாடினார்கள். ஆனால் முதலில் நடிக்க வேண்டியதாக இருந்தது விஜய் தான். சில சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜய் நடிக்க முடியாமல் போனதால் அஜித்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.