திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2024

தவெக மாநாட்டில் பங்கேற்க அழைப்பில்லை? விஜய்க்கு போட்டியாகும் விஷால்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பங்கேற்பா? என்ற கேள்விக்கு விஷால் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மற்ற நடிகர்களைப் போல் அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டு காலம் தாழ்த்தவில்லை. அதனால் சரியான வயதில், சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவார் என சில ஆண்டுகளுக்கு முன் சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் கூறிவந்தனர். அந்த வகையில் சினிமாவில் மட்டும் தன் வசனங்களின் மூலம் அரசியல் பேசி வந்த விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் விஜயின் தாய், தந்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கமலும் அரசியலுக்கு வந்தபோது அதே எதிர்பார்ப்பு விஜயிடம் உள்ளது. அது போக போக அதிகரிக்குமா? இல்லையா என்பது அடுத்த வரவுள்ள தேர்தலிலும் இனி வரும் காலங்களிலும் தெரிய வரும்.

தவெக கொடியை அறிமுகம் செய்தபோதே அக்கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது குறித்து சர்ச்சையானது. பகுஜன் சமாஜ் கட்சி விமர்சித்திருந்தது. இந்த நிலையில் தவெகவின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வெகு விமரிசையாக நடக்கிறது. இந்த மா நாட்டில் அக்கட்சி தொண்டர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து திரளாக கலந்து கொள்கின்றனர்.

இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும் அக்கட்சி நிர்வாகிகளும் செய்து வரும் நிலையில் போலீஸாரும் இம்மா நாட்டிற்கு அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில் இம்மாநாட்டில், சிறுவர், சிறுமியர், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் யாரும் வர வேண்டாம் என நேற்று விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தவெக மாநாட்டில் பங்கேற்பா? – விஷால் பதில்

இந்த நிலையில் விஜய் சினிமாவில் முன்னணி நடிகர் என்பதாலும் அவருக்கான இமேஜும் அதிகம் என்பதாலும் சினிமா பிரபலங்களும் இம்மா நாட்டில் கலந்துகொள்வார்களா? எனக் கேள்வி எழுந்தன. எனவே நடிகர் விஷாலிடம், தவெக மா நாட்டில் பங்கேற்பா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ”தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன்.

அழைக்கவிட்டாலும் ஓராக நின்று மாநாட்டை பார்ப்பேன். புதிய அரசியல்வாதி வருகிறார். அவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்க ஒரு வாக்காளராக ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும்,” நான் ஏற்கனவே ஒரு அரசியல்வாதி தான். வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளராக இருக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு போட்டியாகும் விஷால்

ஏற்கனவே விஜய் ரசிகரான விஷால், தவெக மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் ஒரு ஓரமாக நின்று மாநாட்டில் விஜய் பேசவுள்ளதை கேட்கவிருப்பதாக் கூறியுள்ளது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால் விஷாய் 2026 ல் போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளது விஜய் கட்சி சார்பிலா, அல்லது தனிக்கட்சி தொடங்கியா? என்பது கேள்வி எழும் நிலையில், அவர் விஜய்க்கு போட்டியாக கூட போட்டியிடலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இது சினிமா நிகழ்ச்சியில்லை என்பதால் விஜய்க்கு நெருங்கிய நலம்விரும்பிகள், முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News