செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

ரஜினி, சூர்யாவை அடுத்து விஜய்யை வளைத்துப்போட நினைத்த பிரபல இயக்குனர்.. நினைச்சது ஒன்னு, ஆனா நடந்து வேற ஒன்னு

இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் விஜய்யை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

விஜய்யின் கடைசிப் படம்

விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நிலையில் இன்னும் ஒரு படத்தில் நடித்துமுடித்து முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். அதன்படி, விஜய் 69 என்ற அவரது கடைசிப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடப் போவது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் அரசியலில் ஈடுபட்டாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது பெரும்பாலான தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. அதேசமயம், முன்னனி நடிகர் விஜய்யை ஹீரோவாக நினைத்து பல இளம் இயக்குனர்களும், ஏன் முன்னணி இயக்குனர்கள் கூட கதை எழுதி வருகின்றனர்.

விஜய் சினிமாவில் ஜெயிச்ச மாதிரி அரசியலிலும் ஜெயிக்க வேண்டும் என பலரும் ஆசைப்பட்டாலும், இன்னும் விஜய் தனது கடைசிப் படம் விஜய்69 என்பதிலிருந்து பின்வாங்க வில்லை. ஆயினும் விஜய்யை வைத்து படமெடுக்க இன்னும் பல தயாரிப்பாளர்கள் வரிசையில் உள்ளனர்.

அதேபோல்தான் இயக்குனர்களும் விஜய்யை சந்தித்து கதை கூறி வருவதாகவும், அவர்களுடன் இணைந்து படம் பண்ண முடியாவிட்டாலும்கூட அவர்களின் ஒவ்வொரு ஓட்டும் தனக்கு முக்கியம் என்பதால் விஜய் தங்களை சந்திக்க விரும்பும் இயக்குனர்களுக்கு நேரம் ஒதுக்கி, பொறுமையாக கதை கேட்கபதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா, பாபிதியோல், யோகி பாபு, திஷா பதானி ஆகியோர் நடிப்பில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ரூ.380 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இப்படம் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்திற்குப் பின் அஜித் படத்தை சிவா இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

சிறுத்தை சிவாவின் ஆசை

இந்த நிலையில் கங்குவா பட புரமோசனின் கலந்து கொண்டு பேட்டியளித்து வரும் சிறுத்தை சிவாவிடம் விஜய் படத்தை இயக்குவது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், விஜய்யை பலமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். அவரை வைத்து ஒரு படம் இயக்குவதற்கு, கதையையும் அவரிடம் கூறினேன். இப்படம் தொடர்பாக நிறைய முறை சந்திப்பு நடந்தன. சமீபத்தில் கூட விஜய்யை சந்தித்துப் பேசினேன். ஆனால் அவரை வைத்து படம் இயக்குவதற்கான நேரம் அமையவில்லை என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஆனால் விஜய் தனது 69 வது படத்துடன் சினிமாவில் இருந்து விடைபெறுவதாக அவர் அறிவித்தாலும், அவர் அரசியலில் முழு கவனம் செலுத்தினாலும் கூட நிச்சயம் அவர் அரசியலில் இருந்துகொண்டே தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்பது பலரது வேண்டுகோளாக உள்ளது.

எனவே முதல் மாநாடு மற்றும் வரும் அடுத்து வரும் சட்டசபை தேர்தலை பொறுத்து விஜய் அடுத்து என்ன முடிவெடுப்பார் என்றும் அப்படி படம் பண்ண மீண்டும் விஜய் ஆசைப்பட்டால் அஜித்,ரஜினி, சூர்யாவை வைத்து படம் இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News