செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

500 ரூபாய் தான் பாக்கெட் மணி.. எங்களுக்குல 50 ரூபாய் தாண்டாது.. இதெல்லாம் ஒரு கஷ்டமா

வரும் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் சூர்யா vs சூர்யா மொத உள்ளனர். ஆம் நடிகர் சூர்யாவின் கங்குவா படமும், நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடிகர் சூர்யாவின் பீனிக்ஸ் படமும் ஒன்றாக வெளியாகிறது. இவர் இதற்க்கு முன்பு அப்பா விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத், நானும் ரவுடி தான், விடுதலை 2 போன்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், தேவை இல்லாமல் எதையாவது பேசி அவ்வப்போது வாங்கி கட்டிக்கொள்கிறார். ஒரு புறம், நடிகர் விஜய் சேதுபதி தன்னை அடுத்தடுத்த படங்களில், சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். தற்போது படங்கள் மட்டுமல்லாமல் டிவி ஷோ என பிசியாக உள்ள விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மகாராஜா படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படம் அவரது 50வது படமாக வெளியான நிலையில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் புலிக்கு பிறந்தது பூனையாக இருக்க முடியாது. ஆனால் நாக்கில் சனி என்று சொல்வதா.. இல்லை வெள்ளந்தி பிள்ளை என்று சொல்வதா என்று தெரியவில்லை. எதையாவது பேசி சர்ச்சைக்குள்ளாகிறார்.

படத்தின் டீசர் வெளியீட்டின்போது பேசிய சூர்யா, தான் வேறு தன்னுடைய அப்பா வேறு என்றும் அவரால் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறி விமர்சனங்களை பெற்றார். இந்நிலையில் தற்போது அவர் கூறியுள்ள மற்றொரு விஷயம் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு லா 50 ரூபாய் தான்.. அதும் ரெண்டு நாளைக்கு

சமீபத்தில் பேசிய அவர், தன்னுடைய அப்பா ஒரு நாளுக்கு 500 ரூபாய் தான் செலவுக்கு தருவார் என்றும் அதை வைத்து வாழ தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் சூர்யா கூறியுள்ளார். சின்ன வயதிலிருந்தே தான் கஷ்டப்பட்டதாகவும் அதனால் சினிமாவில் சாதிப்பதற்காக வந்துள்ளதாகவும் சூர்யா சேதுபதி கூறியுள்ளார். இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எங்களுக்கு லா ஒரு நாளைக்கே 30-50 ரூபாய் தான். இங்கு பலர் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு 12 மணி நேரம் உழைக்கிறார்கள். இவர் என்னடா ன்னா, நம்ம மாச சம்பளமான 15,000 ரூபாயை செலவுக்கு பத்தவில்லை என்று கூறுகிறாரே.. என்று விமர்சித்தும் வருகிறார்கள்.

பக்குவமில்லாமல் மீடியா முன்பு எதை பேச வேண்டும் என்று தெரியாமல் பேசுகிறாரே என்று பாவம் விஜய் சேதுபதி தலையில் அடித்து கொள்வார் போல..

- Advertisement -spot_img

Trending News