இந்தியாவைச் சேர்ந்த எருமை ஒன்று பல கோடி மதிப்புடையது என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வாங்க அந்த எருமை மாட்டைப் பற்றிய் சுவாரஸ்ய தகவலைப் பார்க்கலாம்.
வீட்டிலும் சரி, நண்பர்கள் வட்டாரத்திலும் சரி எருமை என செல்லமாக அழைத்தால் நமக்கு சூடாக கோபம் வரும். அதெப்படி என்னை எருமைன்னு அழைக்கலாம் என வார்த்தைகளால் படபடப்போம். ஆனால் இனிமேல் எருமை என்று யாராவது அழைத்தால் இந்த பணக்கார எருமை மாடுதான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அப்படி ஒரு சம்பவம் செய்துள்ளது இந்த எருமை மாடும்.
அகில இந்திய விவசாயிகள் தொழில் கண்காட்சி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பழமையான நகரம் மீரட். இங்கு சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய விவசாயிகள் தொழில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, தங்களின் கால் நடைகளையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தனர்.
அப்போது, எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது ஹரியானாவின் சிர்சாவைச் சேர்ந்த அன்மோஸ் என்ற எருமை தான். இது. ஏன் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் இதன் கம்பீரம் மட்டுமல்ல, அதன் விலையும்தான். அதனால் அந்தக் கண்காட்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோர் அன்மோல் எருமையை வியந்தபடியே பார்த்துச் சென்றனர்.
காட்ஸ்லியான எருமை – அதன் பெருமை
அன்மோல் எருமையின் மதிப்பு ரூ.23 கோடியாகும். இத்தனை விலையில் வேறெந்த எருமை இருக்குமா எனக் கேள்வி எழுந்து வரும் நிலையில், இந்தியாவில் காஸ்ட்லி எருமையாக இது மதிக்கப்படுகிறது. இந்த எருமையின் உரிமையாளர் இந்த எருமையை விற்றால் ரூ.1.½ கோடியில் சுமார் 15 மெர்சிடிஸ் சீரிஸ் சொகுசு கார்கள் அல்லது ரூ. 12 கோடி மதிப்பிலான ரோல்ஸ் கார்கள் 2 வாங்க முடியும்.
அப்படி ஒரு விலையில் அந்த எருமை உள்ள நிலையில் அதன் விலை மற்றும் அந்த எருமையைப் பற்றி அதன் உரிமையாளர் கூறியதாவது: அன்மோல் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் பல விருதுகள் பெற்றிருக்கிறது. அதன் தினசரி உணவுகளாக, 5 லிட்டர் பால், 4 கிலோ மாதுளை சாறு, 30 வாழைப் பழங்கள், புரதம் உள்ள முட்டை, கால் கிலோ பாதாம், குல்கந்த், தீவனம் ஆகியவைதான் முக்கிய உணவாக வழங்குகிறோம். அன்மோல் நாள்தோறும் 2 முறை குளியல், அதற்கு கடுகு எண்ணெயுடன் மசாஜும் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஏன் இந்த மாட்டிற்கு இத்தனை விலை என்பது குறித்து அவர் கூறியதாவது; அன்மோல் முர்ரா இனத்தைச் சேர்ந்த எருமை ஆகும். அதன் விந்து அரிதானது என்பதால் அன்மோல் எருமையின் விந்து ஒரு மாதத்திற்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்கப்படுகிறது. சிர்சாவைச் சேர்ந்த குழு ஒன்று எருமையின் விந்துவை தொடர்ந்து சேகரித்து அதை விநியோகம் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
எருமையைப் பராமரிக்க ஆகும் செலவு – வருமானம்
மேலும், மாதம் இதன் தீவனம், உணவிற்காக மட்டும் ரூ.60 ஆயிரத்திற்கு மேல் செலவாகும் நிலையில், விந்து விற்பனை மூலம் மாதம் ஒன்றிற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் அதன் உரிமையாளர் வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகிறது. அன்மோல் போல் இந்த கண்காட்சியில் மேலும் இரண்டு மாடுகள் கவனம் பெற்றன. அதன்படி, லட்சுமி, ராணி ஆகிய 2 மாடுகளும் தினமும் 30 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், கண்காட்சியில், அன்மோல், லட்சுமி, ராணி ஆகிய கால் நடைகளை மக்கள் பார்த்து, அவற்றுடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். இந்தியாவில் இதுபோல் எருமை, மாடுகள் இருப்பது பற்றி விவசாயிகளும், மக்களும் பாராட்டி வருகின்றனர். இந்த இனங்கள் அரிதானவை எனக் கூறப்படும் நிலையில் இவற்றை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்துள்ளன.