Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விக்ரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் நிலையில் தற்போது அது வேகம் எடுத்துள்ளது. இன்னும் சில தினங்களில் விஜய் தன்னுடைய இலக்கின் முதல் படியை எடுத்து வைக்க இருக்கிறார்.
இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் அரசியல் வட்டாரங்கள் மீடியாக்கள் என அனைத்தும் அந்த நாளை உற்று நோக்கி வருகின்றனர். அன்று விஜய் என்ன பேசப் போகிறார் அவருடைய கொள்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வமும் உள்ளது.
மேலும் அவருடைய கட்சி கூட்டணியை விரும்புமா அல்லது தனித்தன்மையுடன் போட்டியிடுமா என்ற பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. அதே சமயம் அவர் தற்போது சென்று கொண்டிருக்கும் பாதை சரியானது என ஆதரவு குரல்களும் எழுந்துள்ளது.
மாநாட்டிற்கு தயாராகும் தளபதி
அதாவது நடைபெற இருக்கும் மாநாட்டில் உடல் நலம் குன்றியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு நேரில் இதை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.
ஆனால் உடலை வருத்தி இவ்வளவு தூரம் பயணப்பட்டு யாரும் வர வேண்டாம். வீட்டில் இருந்தபடியே இதை பார்த்து ஆதரவை கொடுங்கள் என விஜய் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். உண்மையில் இது பாராட்டுகளை பெற்றுள்ளது.
பொதுவாக இது போன்ற மாநாட்டில் கூட்டம் கூட வேண்டும் என கட்டாயப்படுத்தி சிலர் வரவைப்பதுண்டு. அதுவும் விஜயின் முதல் மாநாடு இது. அப்படி இருக்கும்போது மக்களை திரட்டி தன் பெரும்பான்மையை காட்ட வேண்டும் என அவர் செயல்பட்டிருக்கலாம்.
ஆனால் அதை செய்யாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படி ஒரு தலைவர் தான் வர வேண்டும் என விஜயின் ஆதரவாளர்கள் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஆக மொத்தம் 2026-யை நோக்கி செல்லும் விஜய்க்கு எந்த அளவுக்கு ஆதரவை கிடைக்கும் என்பது மாநாட்டில் தெரிந்துவிடும்.